Back to Top

மட்டக்களப்பு நகரில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு நகரில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

April 26, 2019  11:07 am

Bookmark and Share
மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பின்புறமான பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (26) காலை மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரின் மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பின்புறமாகவுள்ள கட்டிடத்தில் நகைத் தொழில் செய்துவரும் நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த க. அருட்செல்வம் (44 வயது) என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தான் தொழில் செய்யும் பகுதிக்கு முன்பாகவுள்ள பகுதியிலேயே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்)