Back to Top

IPL 2019 - மும்பை அணியிடம் மீண்டும் தோற்ற சென்னை

IPL 2019 - மும்பை அணியிடம் மீண்டும் தோற்ற சென்னை

May 8, 2019  11:11 am

Bookmark and Share
ஐபிஎல் தொடரின் குவாலிவையர்-1 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

நாணய சுழற்சியை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ். டோனி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

இதை அடுத்து, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன், டு பிளிசிஸ் களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் மும்பை அணியினரின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இதனால் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன.

இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 131 ஓட்டங்களை எடுத்துள்ளது. இதை அடுத்து, மும்பை அணிக்கு 132 ஓட்ட்ங்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி.

மும்பை அணி சார்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டும், குருணால் பாண்டியா, ஜெயந்த் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.

ரோகித் சர்மா 4, டி காக் 8 ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேறினர். சூர்யா குமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடினர். மும்பை அணி 101 ஓட்டங்கள் இருந்தபோது இஷான் கிஷன் 28 வெளியேறினார். அடுத்து வந்த குர்ணால் பாண்டியா டக் முறையில் வெளியேறினார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யா குமார் யாதவ் அணியை வெற்றி பெற செய்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி 9 பந்துகள் மீதம் உள்ள நிலையில் சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சூர்யா குமார் யாதவ் 71 கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்,

சென்னை அணி தரப்பில் இம்ரான் தாகீர் 2 விக்கெட்டும் ஹர்பஜன், சாஹர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.