Back to Top

மோட்டார் சைக்கிள் வீட்டு மதிலில் மோதி விபத்து - ஒருவர் பலி

மோட்டார் சைக்கிள் வீட்டு மதிலில் மோதி விபத்து - ஒருவர் பலி

May 10, 2019  02:48 pm

Bookmark and Share
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (09) இரவு தேற்றாதீவு, கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த விபத்தில் தேற்றாத்தீவினை சேர்ந்த அமிர்தநாதன் தருமராஜா (43வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றவர் கொம்புச்சந்தி, பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வளைவில் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் வீட்டு மதிலில் மோதி விபத்துக்குள்ளானதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பிலான சீசீரிவி கமராப் பதிவுகளும் பெறப்பட்டுள்ளது.

(மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்)