Back to Top

 மனித புதைக்குழி வழக்கு விசாரணைகள் 17 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

மனித புதைக்குழி வழக்கு விசாரணைகள் 17 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

May 10, 2019  04:10 pm

Bookmark and Share
மன்னார், திருகேதீஸ்வரம், மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைக்குழி மற்றும் மன்னார் நகர மத்திய பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி ஆகியவற்றின் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று (10) மன்னார் நீதிமன்றத்தில் குறித்த இரு வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும் மன்னார் நீதிமன்ற நீதவான் ரி. சரவணராஜா மன்றுக்கு சமூகம் அளிக்காத காரணத்தினால் பதில் நீதவான் இ. கயஸ் பெல்டானோ தலைமையில் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட பதில் நீதவான் குறித்த இரு வழக்கு விசாரணைகளையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்தார்.

மன்னார் மனித புதைக்குழி தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு தொடர்பான விடையங்கள் முன்வைக்கப்படும் என எதிர்பாக்கப்பட்ட போதிலும் எந்தவித சமர்பிப்புக்களும் இடம்பெறவில்லை.

அதே நேரத்தில் திருகேதீஸ்வர மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் ஆய்வு தொடர்பாகவும் எதுவித முன்வைப்புக்களும் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

(மன்னார் நிருபர் லெம்பட்)

Most Viewed