Back to Top

மண் லொறி மோதி 9 மாடுகள் உயிரிழப்பு

மண் லொறி மோதி 9 மாடுகள் உயிரிழப்பு

May 11, 2019  04:23 pm

Bookmark and Share
கந்தளாய் சேருவில பகுதியில் மண் லொறி ஒன்று, மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடுகள் மீது மோதியதில் 9 எருமை மாடுகள் ஸ்தலத்திலயே பலியாகின.

மேலும் மூன்று மாடுகள் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் வீதி சமகிபுர பிரதேசத்தில் சேருநுவரவில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில் கொழும்புக்கு மண் ஏற்றிச்சென்ற லொறி ஒன்றே மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் மீது மோதியுள்ளன.

லொறியின் சாரதி கந்தளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

(திருகோணமலை நிருபர் கீத்)