Back to Top

ஆண்டு 1 முதல் 5 வரை ஆரம்பம் - மாணவர்களின் வருகை குறைவு

ஆண்டு 1 முதல் 5 வரை ஆரம்பம் - மாணவர்களின் வருகை குறைவு

May 13, 2019  10:37 am

Bookmark and Share
கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய பாடசாலைகளில் ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரையான வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கு இணைவாக யாழ்ப்பாணத்தில் உள்ள புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம் மற்றும் இந்து ஆரம்ப பாடசாலைகளிலும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தந்திருந்தனர்.

பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் மலையகத்ததில் ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரையான வகுப்பு மாணவர்களின் வருகை மந்தமாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

(யாழ். நிருபர் ரமணன் மற்றும் மலையக நிருபர் சதீஸ்குமார்)