Back to Top

கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

May 13, 2019  01:20 pm

Bookmark and Share
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவ கெம்பியன் மேல் பிரிவு தோட்ட பகுதியில் 10 ஆம் இலக்க தொடர் லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் இன்று (13) காலை 6.45 மணி அளவில் மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காலை கடன்களை முடித்து கொண்டு தமது வீட்டைநோக்கி சென்று கொண்டிருந்த போது பெண் ஒருவர் குறித்த லயன் குடியிருப்பின் அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்றில் ஒருவர் தலைகீழாக கிடந்ததை கண்டு, அயல்வர்களிடம் அறிவித்தார்.

அதை தொடர்ந்து தோட்ட பொது மக்களால் 1990 என்ற அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நோயாளர் காவு வண்டியின் அதிகாரிகளால் குறித்த நபர் உயிர் இழந்துள்ளதாக அறிவிக்கபட்டதை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு தடவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரனைகளை மேற்கொண்ட போது, சடலமாக மீட்கபட்டபட்டவரின் தலை பகுதியின் வலது பக்கம் பாரிய வெட்டுகாயங்கள் இருப்பதாக தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் திருமணமாகாத 60 வயதுடைய குழந்தை மாயாண்டி என்ற நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனது சசோதரனுடைய மகனை பார்ப்பதற்கு பொகவந்தலாவ ஆல்டி தோட்ட பகுதிக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்ற நபர், நேற்று இரவு வீடு வரவில்லை எனவும் இன்று காலை அயலவர்களால் இந்த நபர் கால்வாய் ஒன்றில் கிடப்பதாக தமக்கு தெரிய வந்துள்ளதாக, சடலமாக மீட்கபட்டவரின் சகோதரனுடைய மகள் பொலிஸாருக்கு வாக்குமுலம் வழங்கியதாக தெரிவிக்கபடுகிறது.

எனவே, சம்பவம் தொடர்பில் மரண விசாரணைகளுக்காக ஹட்டன் நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றவுடன் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக சடலம் நாவலபிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)