Back to Top

குளவி கொட்டுக்கு இலக்காகிய 8 ஆண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

குளவி கொட்டுக்கு இலக்காகிய 8 ஆண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

May 13, 2019  01:43 pm

Bookmark and Share
பொகவந்தலாவ, முத்துலெச்சுமி தோட்டத்தில் தொழில் புரிந்து கொண்டிருந்த 8 ஆண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு உள்ளாகி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (13) காலை 10.30 மணி அளவில் இடம்பெற்றதாக காயங்களுக்கு உள்ளான ஆண் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த தோட்ட பகுதியில் உள்ள தேயிலை மலையினை சுத்தபடுத்தும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை தேயிலை மலையின் அடிவாரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக பாதிக்கபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

காயங்களுக்கு உள்ளான 8 ஆண் தொழிலாளர்களும் தொடர்ந்தும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் குறித்து அச்சமடைய தேவையில்லை என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)