Back to Top

ஐபிஎல் 2019 இல் பதிவான சாதனை துளிகள்

ஐபிஎல் 2019 இல் பதிவான சாதனை துளிகள்

May 13, 2019  03:49 pm

Bookmark and Share
ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 4 வது முறையாக சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி தட்டி சென்றது. 2 வது இடத்தை பிடித்த சென்னை அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் பதிவான சாதனை துளிகள் பற்றிய விவரத்தை பார்க்கலாம்.

இந்த ஐபிஎல் சீசனில் மொத்த போட்டி - 60
சிக்சர்கள் - 785
பவுண்டரிகள் - 1,651
விக்கெட்டுகள் - 682
ஓட்டங்கள் - 19,416
சதங்கள் - 6
அரை சதம் - 106
அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் டெல்லி அணியை சேர்ந்த ஷிகர் தவான் - 64
அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் கொல்கத்தா அணியை சேர்ந்த ரஸல் - 52
அதிக பவுண்டரிகள் அடித்த அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் - 236
அதிக சிக்சர்கள் விளாசிய அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 143
ஒரு அணியின் அதிக பட்ச ஓட்டங்கள் 232/2 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஒரு அணியின் குறைந்த பட்ச ஸ்கோர் 70 பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்.

Most Viewed