Back to Top

பட்டப் பகலில் வீடு உடைத்து பல லட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு

பட்டப் பகலில் வீடு உடைத்து பல லட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு

May 14, 2019  10:15 am

Bookmark and Share
யாழ்ப்பாணம், புங்கன்குளம் பகுதியில் பட்டப் பகலில் வீடு உடைத்து பல லட்சம் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், புங்கன்குளம் வீதி பாசையூர் அந்தோனியார் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே நேற்று (13) இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவன் மனைவி இருவரும் ஆசிரியர்கள் நேற்று முன்தினம் இருவரும் வீட்டை பூட்டிவிட்டுப் பாடசாலைக்குச் சென்ற நேரத்தில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த ரி.வி, டெக், மடிக்கணணி உள்ளிட்ட பல லட்சம் பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

பாடசாலை நிறைவடைந்ததும், கணவன் மனைவி இருவரும் வீட்டை வந்து பார்த்த போது, வீட்டின் முன் வாயில் கதவு உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்தவர்கள், வீட்டிற்குள் சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த இலத்திரனியல் பொருட்கள் திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.

திருட்டு சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததுடன், பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(யாழ். நிருபர் சுமித்தி)