Back to Top

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை

May 14, 2019  11:02 am

Bookmark and Share
12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ருசித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள் எடுத்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து வரும் தலைவர் டோனி, ஐ.பி.எல். போட்டியின் விக்கெட் காப்பின் போது புதிய சாதனை படைத்துள்ளார்.

இறுதிப் போட்டியில் மும்பை அணி வீரர்கள் குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை டோனி தனது பிடி மூலம் ஆட்டம் இழக்க வைத்தார்.

190 ஐ.பி.எல். ஆட்டங்களில் விளையாடி இருக்கும் டோனி இதுவரை 132 விக்கெட்டுகளை (94 பிடி, 38 ஸ்டம்பிங்) வீழ்த்த காரணமாக இருந்துள்ளார்.

இதற்கு முன்பு கொல்கத்தா அணியின் தலைவரும், விக்கெட் காப்பாளருமான தினேஷ் கார்த்திக் 182 ஆட்டங்களில் 131 விக்கெட்டுகள் (101 பிடி, 30 ஸ்டம்பிங்) விழ காரணமாக இருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை டோனி தகர்த்துள்ளார்.