Back to Top

Michelin இனுடைய புதிய Michelin Concept Store ஐ நிறுவியுள்ளதனூடாக ஒலிம்பிக் டயர் ஹவுஸ் உடனான பங்காண்மையை DIMO மேம்படுத்தியுள்ளது

Michelin இனுடைய புதிய Michelin Concept Store ஐ நிறுவியுள்ளதனூடாக ஒலிம்பிக் டயர் ஹவுஸ் உடனான பங்காண்மையை DIMO மேம்படுத்தியுள்ளது

May 14, 2019  12:39 pm

Bookmark and Share
ஒலிம்பிக் டயர் ஹவுஸ் பிரைவட் லிமிடெட் உடன் இரண்டு தசாப்த கால வெற்றிகரமான பங்காண்மையை கொண்டாடும் வகையில் Diesel & Motor Engineering PLC (DIMO), Michelin டயர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டயர் விற்பனை நிலையத்துக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

ஒலிம்பிக் டயர் ஹவுஸின் புதிய கிளை இல. 128, காலி வீதி, கொழும்பு 04 எனும் முகவரியில் அமைந்துள்ளதுடன், முழுமையாக Michelin வர்த்தக நாமம் பொறிக்கப்பட்ட டயர்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியுள்ளது. இதனூடாக கொள்வனவாளர்களுக்கு நிபுணத்துவம் வாய்ந்த சேவையையும் ஆலோசனையையும் உறுதி செய்துள்ளது.

இந்த டயர் விற்பனை நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் DIMO இன் தலைமை அதிகாரியும் முகாமைத்துவ பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே, குரூப் பிரதம நிறைவேற்று அதிகாரி கஹநாத் பண்டிதகே, நிறைவேற்று பணிப்பாளர் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி அசங்க ரணசிங்க, பிரதம செயற்பாட்டு அதிகாரி விரங்க விக்ரமரட்ன, பொது முகாமையாளர் ரொஷான் சேரசிங்க மற்றும் பதில் பொது முகாமையாளர் ரமேஷ் சோமரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஒலிம்பிக் டயர் ஹவுஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளும், வாடிக்கையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

DIMO நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான ரஞ்ஜித் பண்டிதகே கருத்துத் தெரிவிக்கையில், ´எமது வியாபார மாதிரியில், விநியோகத்தர்கள் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை வழங்குகின்றனர். குறிப்பாக உலகின் சிறந்த பொறிமுறைநுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வர்த்தக நாமங்களை எமது வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்கின்றனர். எமது வியாபாரத்தின் பிரதான பங்காளர்களாக நாம் விநியோகத்தர்களை இனங்கண்டுள்ளோம். எமது விநியோக நாளிகைகளை மேம்படுத்துவதில் முக்கிய அங்கமாக விநியோக பங்காளர்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், அவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதும் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன.´ என்றார்.

ஒலிம்பிக் டயர் ஹவுஸின் இந்த புதிய டயர் விற்பனை நிலையத்தினுடாக DIMO இன் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பங்காளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பையும் உறுதி செய்துள்ளது. மேலும், சகல பங்காளர்களுக்கும் மதிப்பளிக்கும் Michelin இன் உறுதி மொழியும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிமுகத்தினூடாக DIMO இன் தொனிப்பொருள்ரூபவ் நம்பிக்கை வாய்ந்த பங்காளரான Michelin உடன் சிறந்த முறையில் பொருந்தியுள்ளது. இது உள்நாட்டு விநியோகத்தர்களின் தொழில்முயற்சியாண்மையை விருத்தி செய்வதில் பங்களிப்பு வழங்குவதாக அமைந்துள்ளது. DIMO மற்றும் ஒலிம்பிக் டயர் ஹவுஸ் ஆகியவற்றுக்கிடையில் காணப்படும் நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இது அமைந்துள்ளது.

1961 ஆம் ஆண்டு முதல் கொழும்பில் அமைந்துள்ள புகழ்பெற்ற டயர் விநியோகத்தராக ஒலிம்பிக் டயர் ஹவுஸ் திகழ்கிறது. சுமார் ஆறு தசாப்த காலமாக, வாடிக்கையாளர்களின் வெவ்வேறான தேவைகளை நிவர்த்தி செய்து வருகிறது.

1997 ஆம் ஆண்டு DIMO மற்றும் ஒலிம்பிக் இடையிலான பங்காண்மை ஆரம்பமாகியிருந்தது. புதிய கிளையின் செயற்பாடுகளை ஒலிம்பிக் டயர் ஹவுஸ் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவரான கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஒஷானி வீரக்கொடி முன்னெடுத்திருந்தார். புதிய டயர் விற்பனை நிலையத்தினூடாக நாம் DIMO உடன் பேணும் உறவு மேம்படுத்தப்படும் என்பதுடன், புதிய அமைவிடம் வெற்றிகரமாக அமைந்திருக்கும் என்பதுடன்ரூபவ் சகல தரப்பினருக்கும் அனுகூலங்களை பெற்றுக் கொடுக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம்´ என ஒஷானி வீரக்கொடி தெரிவித்தார்.

இந்த புதிய விற்பனை நிலையத்தில் பரந்தளவு டயர் தெரிவுகள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், நவீன தொழில்நுட்ப சாதன வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு நட்பான சேவையை பெற்றுக் கொடுக்கும் வகையில், முறையான பயிற்சிகளைப் பெற்ற தொழில்நுட்பவியலாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளதுடன், திங்கள் முதல் சனி வரை காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை திறந்திருக்கும்.

DIMO பரந்தளவு Michelin டயர்களை சந்தைப்படுத்தி வருகிறது. இதில் மோட்டார் சைக்கிள், பயணிகள் கார், SUV மற்றும் ட்ரக் மற்றும் பஸ் டயர் போன்றன அடங்கியுள்ளன. நாடு முழுவதையும் சேர்ந்த விநியோக வலையமைப்பினூடாக இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், நாட்டில் காணப்படும் நன்மதிப்பைப் பெற்ற, நீண்ட காலமாக இயங்கும் வியாபார அமைப்புகளுடன் இதற்காக இணைந்துள்ளது. புகழ்பெற்ற Michelin வர்த்தக நாம டயர்களை DIMO நம்பிக்கையுடனும், ஒப்பற்ற விற்பனைக்கு பிந்திய சேவையுடனும் விநியோகித்து வருகிறது.

Most Viewed