Back to Top

யாழில் நினைவு அஞ்சலி நிகழ்வுகள்

யாழில் நினைவு அஞ்சலி நிகழ்வுகள்

May 14, 2019  12:55 pm

Bookmark and Share
வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜலிங்கம் தலைமையில் நேற்றுக் காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

தமிழ் இனப்படுகொலை வாரம் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், 1996 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தின் போது, சுண்டுக்குழி மாணவி கிரிசாந்தி குமாரசுவாமி உட்பட அவரது உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில், பொது ஈகைச் சுடரினை மாநகரதுணை முதல்வர். து. ஈசன் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து, வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க. சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

(யாழ். நிருபர்கள் சுமித்தி மற்றும் பிரதீபன்)

Most Viewed