Back to Top

Huawei ஸ்மார்ட்போன் சாதனங்களில் தரவு சேமிப்பிற்கு அதிகரித்த இட வசதி

Huawei ஸ்மார்ட்போன் சாதனங்களில் தரவு சேமிப்பிற்கு அதிகரித்த இட வசதி

May 14, 2019  01:09 pm

Bookmark and Share
நாம் விரும்புகின்ற எதனையும் ஸ்மார்ட்போன் எனப்படுகின்ற சாதனத்தின் மூலமாக பெற்றிடக்கூடிய தற்போதைய யுகத்தில், மொபைல் தொலைபேசியின் உள்ளக தரவு சேமிப்பு இட வசதியைப் பொறுத்த வரையில் அதிசிறந்த கொள்ளளவு ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது.

அன்ட்ரொயிட் (Android) இனைப் பொறுத்தவரையில், பெருந்தொகை வகைப்பட்ட சாதனங்கள் கிடைக்கப்பெறுவதுடன், அவை அனைத்துமே வெவ்வேறு அளவுகளிலான உள்ளக தேக்கு திறன் அளவு மற்றும் RAM இனைக் கொண்டுள்ளன. விலைகளைப் பொறுத்து எமது தெரிவுகளும் மாறுபடுவதுடன், சில வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட நிலைமையுடன் ஒப்பிடுகையில், உற்பத்தியாளர்கள் எந்த அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளனர் என்பதை எம்மால் காணக்கூடியதாக உள்ளதுடன், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தை எடுத்துக் கொண்டால் 3GB அளவு RAM மற்றும் 32GB தேக்கக வசதி என்பன சாதாரண நியமங்களாக மாறியுள்ளன. இக்காரணத்தால் அன்ட்ரொயிட் அல்லாத தொலைபேசி பாவனையாளர்களுடன் ஒப்பிடுகையில், அன்ட்ரொயிட் பாவனையாளர்களின் வாழ்வு இலகுவானதாக காணப்படுகின்றது.

எனினும், தற்போது குறிப்பாக மலிவான விலைகளில் கிடைக்கப்பெறுகின்ற ஸ்மார்ட்போன்களை எடுத்துக் கொண்டால் அனேகமான ஸ்மார்ட்போன்களின் அதிகபட்ச உள்ளக தேக்கு திறன் 8GB ஆக காணப்படுகின்றது. தொலைபேசியில் கோப்புக்கள் (files) மற்றும் பயன்பாடுகளை (apps) சேமித்துக் கொள்வது மட்டுப்படுத்தப்படுகின்றது. ஸ்மார்ட்போன்கள், குறிப்பாக அன்ட்ரொயிட் அல்லாத வகையைச் சார்ந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவாரி micro SD அட்டைகளை இணைத்துக் கொள்ள இசைவாக்கமற்றவையாக காணப்படுவதுடன், தரவு விபரங்களை தொடர்ச்சியாக வேறு சாதனத்தில் சேமித்துக் கொள்ள வேண்டிய அல்லது தனிப்பட்ட பாவனை கணினி ஒன்றுக்கு மாற்றீடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் பாவனையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கின்றது.

குறைந்த விலையில் கிடைக்கப்பெறுகின்ற ஸ்மார்ட்போன்கள் எப்போதும் பல்வேறு மடடு; ப்படுத்தல்களைக் கொண்டுள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தேக்கக இட வசதியைக் கொண்டுள்ளமை மிகவும் ஏமாற்றமளிக்கின்ற ஒரு மட்டுப்படுத்தலாக காணப்படுகின்றது. ´உங்களது தேக்ககத்தில் இட வசதி தீர்ந்து போயுள்ளது´ என்ற செய்தி அறிவிப்பை தொடர்ச்சியாக தமது தொலைபேசியில் காணும் போது பாவனையாளர்கள் மிகுந்து ஏமாற்றம் அடைகின்றனர். மறுபுறத்தில், பெரும்பாலான சமயங்களில் பயன்பாடுகளை வெளிவாரி SD அட்டைக்கு மாற்றம் செய்வதற்கு தமது நேரத்தைச் செலவிடுவதற்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதுடன், அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற பயன்பாடுகளை தொடர்ச்சியாக எவ்வேளையிலும் தொலைபேசியிலிருந்து நீக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

தொலைபேசியின் கட்டமைப்பிலுள்ள கோப்புக்களால் எடுக்கப்படுகின்ற இட அளவுகளும் பாவனையாளர்களுக்கு தடையை ஏற்படுத்துகின்றன. மேலும், வெளிவாரி தேக்ககத்தில் பயன்பாடுகளை உள்ளிறக்கம் செய்து கொள்வதற்கு அன்ட்ரொயிட் முறையாக உதவுவதில்லை என்பதுடன், இதன் காரணமாக அவர்கள் தமது ஸ்மார்ட்போனிலுள்ள மட்டுப்படுத்தப்பட்ட உள்வாரி தேக்ககத்தில் பயன்பாடுகளை உள்ளிறக்கம் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

Huawei Y5 Lite மற்றும் Y5 Prime போன்ற Huawei ஸ்மார்ட்போன்கள் அடிப்படை வகுப்பைச் சார்ந்த ஸ்மார்ட்போன்களாக காணப்படுவதுடன், அதிகரித்த அளவில் உள்வாரி RAM தேக்குதிறனை வழங்குவதற்காக ஒரு படி மேலே சென்றுள்ளன. 16 GB முதற்கொண்டு உள்வாரி தேக்குதிறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் சராசரியாக 381 புகைப்படங்கள் (12MP), 3500 ஓடியோ கோப்புக்கள் (128kbps) மற்றும் 160 நிமிட வீடியோ பதிவு கோப்புக்கள் (24mbps) ஆகியவற்றை தேக்கிக் கொள்வதற்கு இடமளிக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதிக அளவு RAM இனைக் கொண்டிருப்பது அதிகமான வேலைப்பளுவிலிருந்து இயக்கிக்கு (processor) விடுவிப்பினை அளிப்பதுடன், அதன் மூலமாக விலைமதிப்பற்ற பொறிமுறை சக்கரங்களை சேமித்து, ஸ்மார்ட்போனின் மின்கலத்தின் செயற்திறனை அதிகரிக்கச் செய்கின்றது. அத்துடன் மேம்பட்ட செயற்திறன் மற்றும் வேகமான பயன்பாட்டு செயற்படுத்தல் நேரத்திற்கும் இது இடமளிப்பதுடன், பாவனையாளருக்கு சீரான மற்றும் இலகுவான ஸ்மார்ட்போன் அனுபவத்தையும் வழங்குகின்றது.

Y5 Lite மொபைல் தொலைபேசி ரூபா 14,990 என்ற விலையிலும், Y5 Prime மொபைல் தொலைபேசி ரூபா 17,990 என்ற விலையிலும் கிடைக்கப்பெறுவதுடன், டயலொக் நிறுவனத்தில் மேற்குறிப்பிட்ட சாதனங்களை கொள்வனவு செய்யும் போது ரூபா 4,000 வரையான விலைக் கழிவும் கிடைக்கப்பெறுகின்றது.