Back to Top

மாணவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்துவது ஏன்?

மாணவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்துவது ஏன்?

May 15, 2019  10:25 am

Bookmark and Share
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரி மாணவர்கள் இன்று (15) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாக முன்றலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதன் போது, மாணவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்துவது ஏன்? காக்கவென வந்த சட்டங்கள் அப்பாவிகளுக்கு எதிரானது ஏன்? மாணவர்கள் பழிவாங்கப்படுவதன் நோக்கம் என்ன? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

(யாழ். நிருபர் பிரதீபன்)

Most Viewed