Back to Top

இலங்கையின் மிகப் பெறுமதியான தனியார் வங்கி வணிகக் குறியாக கொமர்ஷல் வங்கி தெரிவு

இலங்கையின் மிகப் பெறுமதியான தனியார் வங்கி வணிகக் குறியாக கொமர்ஷல் வங்கி தெரிவு

May 15, 2019  02:02 pm

Bookmark and Share
இலங்கையின் இவ்வாண்டுக்கான மிகப் பெறுமதி வாய்ந்த தனியார் வங்கி வணிகக் குறியாக, கொமர்ஷல் வங்கி தெரிவாகியுள்ளது. இலங்கையின் மிகப் பெறுமதி வாய்ந்த வணிகக் குறிகள் தொடர்பான ´பிரான்ட் ஃபினான்ஸ்´ தரப்படுத்தலில், 16 ஆவது தடவையாக வெளியிடப்பட்ட இவ்வாண்டுக்கான அறிவிப்பிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் காணப்படும் மிகவும் பெறுமதியான 5 வணிகக்குறிகளில் காணப்படும் ஒரேயொரு தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கி, நான்காம் இடத்தில் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டதோடு, இந்தத் தரப்படுத்தல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முதல் 10 இடங்களில் இடம்பெற்று வரும் கௌரவத்தைக் கொண்டுகாணப்படுகிறது.

´பிரான்ட் ஃபினான்ஸ்´ நிறுவனமானது, கொமர்ஷல் வங்கியின் வணிகக்குறியின் 2019 ஆம் ஆண்டுக்கான பெறுமதியை 37.269 பில்லியன் ரூபாயாகக் கணித்திருந்தது. இது, கடந்தாண்டிலிருந்து 27 சதவீதம் அதிகரித்திருந்தது. இதன் மூலமாக, இலங்கையின் மிகப் பெரிய தனியார் வங்கியாகவும் முன்னணி வகிக்கும் தனியார் வங்கியாகவும் மீளவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

´பிரான்ட் ஃபினான்ஸ்´ ஆனது, கொழும்பு பங்குச் சந்தைப் பரிவர்த்தனையில் பட்டியல்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்களின் பெறுமதியை, ´றோயல்டிறிலீஃப்´ என்ற முறை மூலமாகக் கணிக்கிறது. இது, இந்நிறுவனத்தால் உலகம் முழுவதிலும் பயன்படுத்தப்படும் ஒன்றாகும்.

உலகிலுள்ள சுயாதீனமான வணிகக்குறிகளுக்கான பெறுமதிகணிப்பு நிறுவனங்களில் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ´பிரான்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி´, தனது தலைமையகத்தை இலண்டனில் கொண்டுள்ளதோடு, உலகம் முழுவதிலும் தனது கிளைகளைக்; கொண்டுள்ளது. ´பிரான்ட் ஃபினான்ஸ்´ நிறுவனத்தின் தரப்படுத்தலானது, ஆண்டுதோறும் எல்.எம்.டி-ஆல் பதிப்பிக்கப்படுகிறது.

இலங்கையிலுள்ள மிகவும் அதிகச் செயற்படுநிலையிலுள்ளதும் துடிப்பானதுமானதுமான நிறுவனங்களில் ஒன்றான கொமர்ஷல் வங்கி, தனது வணிகக்குறியைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளானவை, கூட்டாண்மை, உற்பத்தித் தொடர்பாடல்களுக்கும் கீழ்நிலை வாடிக்கையாளர் தொடர்பாடல் நிலைகளுக்குமிடையிலான ஆரோக்கியமான சமநிலையைக் கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

பாரம்பரிய ஊடகங்களுக்கு மேலதிகமாக, சமூக, டிஜிட்டல் ஊடகங்களிலும் வங்கி செயற்படு நிலையில் உள்ளதோடு, தேசிய, பிராந்திய மட்டங்களில், வாடிக்கையாளர் கலந்துரையாடல் நிகழ்வுகளையும் மேற்கொள்கிறது. சந்தைப்படுத்தல் திட்டங்களையும் வணிகக்குறியைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளையும் உருவாக்கும் போது, உத்தி குறித்து அதிகமான கவனத்தைக் கொண்டிருப்பதாக வங்கி தெரிவித்தது. வங்கியானது தனது வணிகக்குறியின் திறமை வெளிப்பாட்டைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதோடு, தர அளவிலும் எண்ணிக்கை அளவிலும் அதைக் கணிக்கிறது. வணிகக்குறித் தகைமை (பிரான்ட் ஈக்விட்டி), மனதிலிருந்து ஞாபகமூட்டக்கூடியதாக இருத்தல் போன்றஅளவீடுகள் ஆகியன,ஆராய்ச்சிகள் மூலமாக அவ்வப்போது கண்காணிக்கப்படுவதோடு, அவற்றிலிருந்து பெறப்படும் முடிவுகள், தொடர்பாடல் உத்திகளை வகுக்கும் போது கருத்திற் கொள்ளப்படுகின்றன. உத்தி மிக்க இந்த முறைமையானது, கொமர்ஷல் வங்கியின் வணிகப் பெயர் கடந்த பல ஆண்டுகளாக மாற்றமடைந்து, இலங்கையின் மிகவும் பலமான வணிகக்குறிகளில் ஒன்றாக அது மாறுவதற்கு வழிவகுத்துள்ளது.

உலகின் முதல் 1,000 வங்கிகள் என்ற பட்டியலில், தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் இடம்பிடித்த இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி, இலங்கையில் 266 கிளைகளையும் 830 ஏ.டி.எம்-களையும் இயக்குகிறது. கொமர்ஷல் வங்கி, 2016 ஆம் ஆண்டிலும் 2017 ஆம் ஆண்டிலும், சர்வதேச, உள்நாட்டு விருதுகள் என, பல்வேறு விருதுகளை வென்றிருந்ததோடு, 2018 ஆம் ஆண்டில், 40 க்கும் மேற்பட்ட சர்வதேச, உள்நாட்டு விருதுகளை வென்றிருந்தது.

பங்களாதேஷில் 19 நிலையங்களைச் செயற்படுத்துவதோடு, யாங்கோனில் பிரதிநிதித்துவ அலுவலகமும் நைப்பியிடோவில் நுண் நிதிநிறுவனமுமென மியான்மாரிலும், முழுமையான வசதிகளைக் கொண்ட, பெரும்பான்மைப் பங்குடைமையைக் பிரிவு 1 வங்கியை மாலைதீவுகளில் என, கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் விரிந்துகாணப்படுகின்றன.