Back to Top

கெக்கிராவ விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு

கெக்கிராவ விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு

May 15, 2019  02:49 pm

Bookmark and Share
கெக்கிராவ, மடஎட்டிகம பிரதேசத்தில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார்.

வேனில் பயணித்த மூன்று பேரே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.