Back to Top

இசைக் கலைஞர்களுக்கு மொபிடெல், தமது மாஸ்டர் அன்லிமிட்டட் பக்கேஜின் மூலம் அழைப்புக்கள் மற்றும் டேடாவினை இலவசமாக வழங்குகிறது

இசைக் கலைஞர்களுக்கு மொபிடெல், தமது மாஸ்டர் அன்லிமிட்டட் பக்கேஜின் மூலம் அழைப்புக்கள் மற்றும் டேடாவினை இலவசமாக வழங்குகிறது

May 15, 2019  02:59 pm

Bookmark and Share
தேசிய மொபைல் சேவை வழங்குனரான மொபிடெல், ‘caring’ எனும் தமது வர்த்தக நாமத்தின் கோட்பாட்டுக்கு இணங்க அண்மையில் நாட்டில் நிலவிய துரதிஷ்டவசமான சம்பவங்கள் நாட்டின் ஒரு பிரிவு சமூகத்தினருக்கு பொருளாதார ரீதியாக பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பல கலாச்சார நிகழ்வுகள் கலை நிகழ்ச்சிகள் போன்றன இடைநிறுத்தப்பட்டமையினால் பாடகர்கள், பாடல் வரி எழுதுவோர், இசைக்குழு கலைஞர்களின் வருமானங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் மீது அக்கறையை செலுத்திடும் ஓர் வலையமைப்பு என்ற வகையில் கடினமாக உழைக்கும் கலைஞர்களின் சுமையைக் குறைத்திட மொபிடெல் தமது உன்னதமான மாஸ்டர் அன்லிமிட்டட் பக்கேஜ் இனை வழங்குகிறது.

இது மூன்று மாதங்களுக்கு அன்லிமிட்டட் உள்நாட்டு அழைப்புக்களையும் டேடா, வாடகை போன்றவற்றை இலவசமாக வழங்குகிறது. இதன் மூலம் தமது தொடர்பாடல் செலவுகளை இக்கலைஞர்களுக்குக் குறைத்துக் கொள்ளக்கூடிய வசதி காணப்படுகிறது. இச்சலுகையினை இலங்கை இசையமைப்பாளர் சங்கம், இலங்கை இசைக்குழுவினர் சங்கம் மற்றும் இலங்கையின் பாடகர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும்.

தொலைத்தொடர்பாடல் துறையில் முன்னணி வகிக்கும் மொபிடெல் இன் Master Unlimited package மாஸ்டர் அன்லிமிட்டட் பக்கேஜ் ஆனது அன்லிமிட்டட் அழைப்புக்களையும் டேடாக்களையும் வழங்கும் ஒரே பக்கேஜ் ஆகும். இந்த பக்கேஜ்க்கான தற்போதைய வாடகையானது ரூ. 3999 ஆகும். இத்தொகையானது 3 மாத காலத்துக்கு கலைஞர்களுக்கு தள்ளுபடி செய்யப்படுவதுடன் வைப்புத் தொகையில்லாமல் வழங்கப்படுகிறது. கலைஞர்களுக்கு மொபிடெல் - மொபிடெல் அன்லிமிட்டட் அழைப்புக்களையும், ஏனைய வலையமைப்புக்களுக்கு 2000 நிமிடங்களுக்கு இலவச அழைப்புக்களையும் இலவச டேடாவினையும் அனுபவித்திட முடியும். இந்த தாராளமயமான சலுகையின் மூலம் கலைஞர்களுக்கு சேமிப்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பதுடன் எப்போதும் தொடர்பில் இருந்து கொள்ளவும் முடியும்.

‘caring’என்பது மொபிடெல் இன் மரபணுவில் உள்ளது. அத்துடன் அக்கறை செலுத்தும் கலாச்சாரமானது அதை தனித்துவப்படுத்துகிறது. வாடிக்கையாளர் மையப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட மொபிடெலின் Care எனும் கோட்பாடானது மக்களின் தேவைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புக்களை பூர்த்திசெய்யும் வகையில் தமது சேவைகளை வடிவமைத்துள்ளது.