Back to Top

டேன் பிரியசாத் பிணையில் விடுதலை

டேன் பிரியசாத் பிணையில் விடுதலை

May 15, 2019  06:42 pm

Bookmark and Share
கைது செய்யப்பட்ட புதிய சிங்களே தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் பிணையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

டேன் பிரியசாத் சட்டத்தரணி ஊடாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் நேற்று சரணடைந்த நிலையில் பின் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 13ம் திகதி சந்தேகநபரான குறித்த நபர் மீதொட்டுமுல்ல பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவரை மிரட்டியதாக பொலிஸார் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபரை கைது செய்ததாக நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.

பிரதிவாதியான சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இது பிணை வழங்கக் கூடிய குற்றம் எனவும் எனவே சந்தேக நபருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றத்திடம் வேண்டியுள்ளார்.

அதனடிப்படையில் சந்தேக நபரை இரண்டு ஐந்து லட்சம் ரூபாய் சரீரப் பிணைகளில் அடிப்படையில் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வழக்கை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை ஒத்தி வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.

Most Viewed