Back to Top

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

May 16, 2019  10:02 am

Bookmark and Share
கொபெய்கனே, விதிகுளிய சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நிகவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொபெய்கனே பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.