Back to Top

பீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது

பீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது

May 20, 2019  02:36 pm

Bookmark and Share
அதிகரித்துச் செல்லும் தனது வாடிக்கையாளர் வலையமைப்புக்கு மேம்படுத்தப்பட்ட சிக்கல்களில்லாத வாடிக்கையாளர் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், தனது ஹொரண கிளையை அதிகளவு இடவசதி படைத்த புதிய முகவரிக்கு மெருகேற்றம் செய்து இடம்மாற்றியுள்ளது.

இல. 171- யு, இரத்தினபுரி வீதி, ஹொரண எனும் முகவரியில் அமைந்துள்ள இந்தக் கிளையை, பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பொது முகாமையாளருமான திரு. சப்ரி இப்ரஹிம் திறந்து வைத்தார்.

இலங்கையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக ஹொரண திகழ்கிறது. பெருமளவு ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதுடன், மக்களின் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைக்கும் உதவுகின்றது. எனவே, லீசிங் மற்றும் நிதிச் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தக்கு விஜயம் செய்வோரின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்துள்ளது.

இந்த புதிய அதிகரித்த தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், பீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை, அதிகளவு வசதிகள் படைத்த புதிய பகுதிக்கு இடம்மாற்றியுள்ளது.´ என்றார். இந்த நிகழ்வில், சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் திரு. சஞ்ஜீவ பண்டாரநாயக்க, பிரதம முகாமையாளர் (செயற்பாடுகள்) திருமதி. பிரியங்கா விமலசேன மற்றும் ஹொரண கிளை முகாமையாளர் நுவன் தரங்க ஆகியோருடன் பீப்பள்ஸ் லீசிங் வாடிக்கையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் திரு. சஞ்ஜீவ பண்டாரநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், ´வியாபார நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்படுவதன் காரணமாக ஹொரண வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் பிரதேசமாகும். ஹொரண பிரதேசத்தை அண்மித்து வாழும் மக்கள் தமது நிதித் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு பீப்பள்ஸ் லீசிங் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இது வரவேற்கத்தக்க விடயமாகும். எனவே, ஹொரண பிரதேசத்தில் அதிகளவு வசதிகள் படைத்த கிளை ஒன்று காணப்பட வேண்டியதற்கான தேவையை நாம் இனங்கண்டிருந்தோம். எனவே, நாம் எமது பீப்பள்ஸ் லீசிங் ஹொரண கிளையை சிக்கல்களில்லாத, சௌகரியமான நிதிச் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன், புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளோம். தற்போது பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் எமது புதிய கிளையிலிருந்து நிதிச் சேவைகளை வசதியான முறையில் பெற்றுக் கொள்ள முடியும்.´ என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ´நாம் சகல நிதிச் சேவைகளையும் வழங்குகின்றோம். எனவே, ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்தவர்களை புதிய முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ள பீப்பள்ஸ் லீசிங் கிளைக்கு விஜயம் செய்து, தமக்கு அவசியமான லீசிங் மற்றும் இதர நிதி வசதிகளை வேகமாகவும், நட்பான வகையிலும் பெற்றுக் கொள்ளுமாறு அழைக்கின்றேன். பீப்பள்ஸ் லீசிங் உடன் இணைந்து உங்கள் வியாபாரங்கள் சுபீட்சமாக இயங்கும் என்பதுடன், மக்களின் வாழ்க்கையும் வளம் பெறும் என கருதுகின்றேன்.´ என்றார்.

1995ம் ஆண்டு பீப்பள்ஸ் லீசிங் கம்பனி நிறுவப்பட்டிருந்தது. இது இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். இலங்கையின் வங்கிசாரா நிதித்துறையில் சந்தை முன்னோடியாக பீப்பள்ஸ் லீசிங் கம்பனி திகழ்கிறது. கம்பனியின் உயர் தர கடன் நியமத்துக்காக, Fitch ரேட்டிங் லங்காவினால் AA-(lka) எனும் கடன் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் உயர்ந்த மட்ட தரப்படுத்தலைப் பெற்ற நிதிச் சேவை வழங்குநர் எனும் நிலையை கொண்டுள்ளது. இலங்கையில் இரு சர்வதேச தரப்படுத்தல்களை பெற்ற ஒரே உள்நாட்டு நிதித் தாபனமாக பீப்பள்ஸ் லீசிங் திகழ்கிறது. இதில் ஒன்று Standard & Poor´s (´B+/B´) க்கு நிகரானதாக அமைந்துள்ளது. மற்றையது Fitch ரேட்டிங் இன்டர்நஷனலின் ´B´ தரப்படுத்தலாகவும் அமைந்துள்ளது.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவத்தினால் வழங்கப்படும் நிதிச் சேவைகளில் லீசிங், வாகன கடன், நிலையான வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், வீடமைப்பு மற்றும் வியாபார கடன்கள், தங்கக் கடன்கள், மார்ஜின் டிரேடிங், ஃபக்டரிங் மற்றும் இஸ்லாமிய வங்கியியல் சேவைகள் போன்றன அடங்கியுள்ளன.

இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்ரோ-கொமர்ஸ் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் புரொபர்டி டிவலப்மன்ட் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் ஃப்லீட் மனேஜ்மன்ட் லிமிடட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியன காணப்படுகின்றன.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் பரந்தளவு நிதிசார் சேவைகளை வழங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு சகல சேவைகளையும் இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.