Back to Top

My Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்

My Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்

May 20, 2019  02:53 pm

Bookmark and Share
Samsung Galaxy வாடிக்கையாளர்களுக்கு Samsung Galaxy ஸ்மார்ட் ஃபோன்களில் My Galaxy App இல் K-POP இலவசமாக கிடைக்கப்பெறுகின்றமை ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாகும். யுவதிகள் மத்தியில் அதிகரித்து வரும், இலங்கையில் பெருமளவில் காணப்படும் K-POP இரசிகர்களுக்கு தற்போது நீண்ட நேரம் கொரியன் நாடகங்களையும் K-POP இசையையும் அவர்களது வசதிக்கேற்றவாறு மேலதிக கட்டணங்கள் எதுவும் இன்றி கண்டு அனுபவித்திட முடியும்.

நடைமுறையில் தற்போது கிடைக்கப்பெறும் K-POP உள்ளடக்கமானது பல தெரிவுகளைக் கொண்ட புகழ் பெற்ற நாடகங்களைக் கொண்டிருப்பதோடு Queen of Seven Days இன் 20 பாகங்களையும் உள்ளடக்கியுள்ளது. அத்தோடு Jugglers மற்றும் Manholev நாடகங்களின் 16 பாகங்களும் கிடைக்கப்பெறுகிறது. இந்த content ஆனது 30 பாகங்களைக் கொண்ட Music Bank இனையும் கொண்டுள்ளது. அதனுடன் 7-8 நேரடி இசை நிகழ்ச்சி வீடியோக்களையும் கொண்டுள்ளது. அனைத்து Samsung ஸ்மார்ட் ஃபோன்களிலும் இந்த My Galaxy App ஏற்கனவே லோட் செய்யப்பட்டுள்ளது. Flagship வாடிக்கையாளர்கள் Play Store இன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள் முடியும்.

Samsung Sri Lanka ஆனது Samsung smartphone வாடிக்கையாளர்களுக்கு மேலும் பெறுமதிகள் பலவற்றை சேர்த்திட காத்திருக்கிறது. ஜூன் மாதம் நடுப்பகுதி முதல் My Galaxy App க்கு மேலும் பல content களை சேர்க்கவிருக்கிறது. பொழுதுபோக்கு பிரிவில் K-Pop, Games மற்றும் Quizzes/Trivia மற்றும் உணவு, ஃபெஷன், சுற்றுலா போன்றவற்றுக்கு கவர்ச்சிகரமான கூப்பன் ஒப்பந்தங்களும் அத்தோடு My Galaxy App இனால் பரிந்துரைக்கப்படும் online பங்காளர்களின் ஊடாக மீள் குறைத்துக் கொள்ளக்கூடிய S-coins இனையும் இது கொண்டுள்ளது. யுவதிகளினால் பெரிதும் விரும்பப்படும் இவ்வாறான புத்தம்புதிய மற்றும் இலவசமான content மூலம், பரந்தளவிலான வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் விடயங்களை வழங்குவதினூடாக இலங்கையினரால் பெரிதும் விரும்பப்படும் ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமாக Samsung தமது தரத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது.