Back to Top

4 வது தடவையாக 'ஆண்டுக்கான மக்களின் விளம்பரம்' SLIM விருதைப் பெற்ற கொமர்ஷல் கிரெடிட்

4 வது தடவையாக 'ஆண்டுக்கான மக்களின் விளம்பரம்' SLIM விருதைப் பெற்ற கொமர்ஷல் கிரெடிட்

May 22, 2019  11:44 am

Bookmark and Share
இலங்கையின் முதன்மையான நிதியியல் சேவைகள் நிறுவனங்களுள் ஒன்றாக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள கொமர்ஷல் கிரெடிட் அன்ட் பி.எல்.சி. நிறுவனமானது, உயர்தரமான நிதியியல் சேவைகள் மற்றும் தொழிற்பாடுகளை திறனளவீடு செய்கின்றமைக்காக பரவலாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட ஒரு நிறுவனமாக திகழ்கின்றது.

அத்துடன் நாட்டில் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்ற நிதி நிறுவனமாகவும் கருதப்படுகின்ற கொமர்ஷல் கிரெடிட் அன்ட் பி.எல்.சி. ஒரு உறுதிமிக்க பெறுமானத்தை அடிப்படையாகக் கொண்ட கலாசாரத்தை வலியுறுத்திச் செயற்படுவதில் வெற்றி கண்டுள்ளது. மிகவும் போட்டிமிக்கதொரு சூழலில் முன்னோக்கிச் செல்லவும் தொடர்ச்சியான வளர்ச்சியை அடைந்து கொள்வதற்கு இந்தப் போக்கு நிறுவனத்திற்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற ‘SLIM-Neilson Peoples Awards’ நிகழ்வின் போது ´ஆண்டுக்கான மக்களின் விளம்பரம் 2019´ என்ற விருதை பெற்றுக் கொண்டதன் மூலம் எமது நிறுவனமானது மீண்டும் இவ் அங்கீகரத்தை தனதாக்கிக் கொண்டிருக்கின்றது. கொமர்ஷல் கிரெடிட் அன்ட் பி.எல்.சி. நிறுவனம் பெரும் மதிப்புமிக்க இவ்விருதை வெற்றி கொள்கின்ற நான்காவது வருடம் இதுவாகும். நிறுவனமானது இவ்விருதை இதற்கு முன்னர் 2015, 2016 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் வெற்றி கொண்டிருந்தது. மிகுந்த வரவேற்பைப் பெற்று பலரது இதயங்களையும் கொள்ளை கொண்டிருக்கின்ற ´அன்புக்குரியவர்கள்´ (Loved Ones) என்ற வர்த்தக விளம்பரமே இதற்கு முன்னரும் இவ்விருதை மூன்று தடவை பெற்றுக் கொடுத்திருக்கின்றது.

கொமர்ஷல் கிரெடிட் அன்ட் பி.எல்.சி. நிறுவனத்தின் பிரதம தொழிற்பாட்டு அதிகாரியான ரஜிவ் காசி செட்டி கூறுகையில், ´நான்காவது தடவையாக இம்முறையும் இந்த ´ஆண்டுக்கான மக்களின் விளம்பரம்´ என்ற விருதை பெற்றுக் கொண்டதையிட்டு நாம் உண்மையிலேயே புளகாங்கிதமும் மன மகிழ்ச்சியும் அடைகின்றோம். எமது நிறுவனத்துடன் தொடர்புபட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் நாம் வழங்குகின்ற சேவைகளின் எல்லா மட்டங்களிலும் நாம் பெற்றுக் கொண்ட வெற்றி பிரதிபலிப்பதை உறுதி செய்யும் விடயத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்´ என்றும் தெரிவித்தார்.

‘SLIM-Nielsen Peoples Awards’ என்பது, இலங்கை மக்களின் மனங்களில் ஆழமாக மற்றும் நீடித்து நிலைத்திருக்கும் அடிப்படையில் பதிந்திருக்கின்ற வர்த்தகக் குறியீடுகள் மற்றும் ஆளுமைகளை அங்கீகரித்துப் பாராட்டுகின்ற ஒரு உத்தியோகபூர்வ நிகழ்வாக திகழ்கின்றது. இம்முறையும் தொடர்ச்சியாக 13ஆவது வருடமாக இடம்பெற்ற இவ்விருது வழங்கல் நிகழ்வானது, கூட்டாண்மை நிறுவனங்களின் நாட்காட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டிருந்த சந்தைப்படுத்தல் நிகழ்வுகளில் ஒன்றாக காணப்பட்டது.

மக்களின் குரல்களை பிரதிபலிக்கும் விதத்தில், நீல்சன் ஸ்ரீலங்கா நிறுவகத்தினால் தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரந்துபட்ட அளவிலான ஆய்வின் ஊடாக கண்டறியப்பட்ட பெருமளவிலான விண்ணப்பதாரிகளில் இருந்து, விருதுகளுக்காக பெயர் குறிப்பிடப்படுவோர் மற்றும் விருதுகளை பெறுவோர் ஆகிய தரப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன்போது நாட்டின் பொதுமக்களே ஒரு நடுவர் குழுவைப் போல செயற்பட்டதுடன், தமக்கு விருப்பமான வர்த்தகக் குறியீடுகள், ஆளுமைகள், வர்த்தக விளம்பரங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் போன்றவற்றை அவர்களே தர வரிசைப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனம் பரந்துபட்ட வகைகளிலான சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது. அவற்றுள் - குத்தகை, வைப்புக்கள், கடன்கள், நிதிசார் அறிவுரை, ரியல் எஸ்டேட் மற்றும் காணி விற்பனை, நுண் நிதிச் சேவைகள் மற்றும் வாடகைக் கொள்வனவு போன்றவை உள்ளடங்குகின்றன. கடந்த பல வருங்களாக பல்வேறு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கு நிறுவனம் நிதி வசதியளித்துள்ளதுடன், நாட்டின் சனத்தொகையில் இலகுவாக பாதிப்புக்குள்ளாகக் கூடிய மக்களுக்கு தொழில் வாய்ப்பு மற்றும் தொழில் முயற்சியாண்மை வழிகாட்டல் என்பவற்றை வழங்குவதன் ஊடாக அவர்களை வலுவூட்டுவதையும் நிதி அடிப்படையில் மேம்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது.