Back to Top

2019 ல் இலங்கையின் மிகவும் பெறுமதிமிக்க ஆயுள் காப்புறுதி வர்த்தக நாமமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள செலிங்கோலைஃப்

2019 ல் இலங்கையின் மிகவும் பெறுமதிமிக்க ஆயுள் காப்புறுதி வர்த்தக நாமமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள செலிங்கோலைஃப்

May 22, 2019  12:08 pm

Bookmark and Share
இந்த நாட்டின் மிகவும் பெறுமதி மிக்க ஆயுள் காப்புறுதி வர்த்தக நாமமாக செலிங்கோலைஃப் தெரிவு செய்யப்பட்டுள்ளது. பிராண்ட் பினான்ஸின் 16 வது பதிப்பின் தரப்படுத்தலின் கீழ் 2019 ம் ஆண்டுக்கான மிகவும் பெறுமதி மிக்க ஆயுள் காப்புறுதி வர்த்தக நாமமாக இந்தத் தெரிவு இடம் பெற்றுள்ளது.

15 வருடங்களாக இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தலைமை தாங்கிவரும் செலிங்கோலைஃப், நாட்டில் தெரிவு செய்யப்பட்ட மிகவும் பெறுமதி மிக்க 100 வர்த்தக முத்திரைகளில் முதல் 40 இடங்களுக்குள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் மிகப் பெரிய வங்கிகள் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், சில்லறை வர்த்தக நிறுவனங்கள் என்பனவும் அடங்கும். செலிங்கொலைஃப்பின் வர்த்தக நாமப் பெறுமதியை 3.8 பில்லியன்களாக பிராண்ட் பினான்ஸ் மதிப்பிட்டுள்ளது. இது 2018ல் மதிப்பிடப்பட்ட 3.6 பில்லியன்களை விட ஐந்து வீதம் அதிகமானதாகும். அத்தோடு கம்பனியின் வர்த்தக முத்திரைத் தரத்தை AA இல் இருந்து AA+ ஆகவும் உயர்த்தி உள்ளது.

இந்த தரப்படுத்தல் பற்றி குறிப்பிட்ட செலிங்கோலைஃப்பின் தலைவர் ஆர்.ரெங்கநாதன் ´நிதி சேவைத் துறையில் அதிலும் குறிப்பாக ஆயுள் காப்புறுதித் துறையில் நம்பிக்கை தான் மிகவும் பெறுமதியான ஒரு விடயம்.

இங்கு வாடிக்கையாளர்களுடனான உறவு பல தசாப்தங்கள் நீடிக்கின்றது. பல குடும்பங்களோடும் அன்புக்கு உரியவர்களோடும் அது தொடர்புபட்டு நிற்கின்றது. செலிங்கோலைஃப் வர்த்தக நாமத்தை வெறுமனே புலப்படக் கூடிய விதத்தில் மட்டும் நம்பிக்கையை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. எமது தொடக்கம் முதலேஅது ஒட்டு மொத்த பெறுமானங்களின் அடிப்படையிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுள் காப்புறுதி வர்த்தகத்தில் நிலைத்திருப்பது என்பது நாம் மிகவும் பாரதூரமாக ஏற்றுக் கொண்டுள்ள பொறுப்பாகும். காரணம் எமது வாடிக்கையாளர்கள் மிகவும் துயரத்துக்கு உள்ளாகின்ற ஒரு சூழ்நிலையில் தான் எமது உண்மையான சேவை அவர்களுக்குத் தேவை பட்டு தொழிற்படுகின்றது. நாம் எப்போதும் எமது வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாகவும் ஆறுதலாகவும் இருந்திருக்கின்றோம். அதுவே இந்த முத்திரை கடந்த காலங்களில் வளர்ச்சி அடையவும் காரணமாக இருந்திருக்கின்றது´ என்று கூறினார்.

பிரிட்டனை தளமாகக் கொண்ட பிறாண்ட் பினான்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் றிச்சர்ட் ஹெய்க் இது பற்றிக் குறிப்பிடுகையில் ´பல தசாப்தங்களாக தனது முன்னோடி நடவடிக்கைகள் காரணமாக செலிங்கோலைஃப் நீண்ட காலமாக வர்த்தக நாமத்தில் தலைமை இடத்தை வகித்து வருகின்றது. வெறுமனே ஒரு ஆயுள் காப்புறுதியாளராக இருப்பதிலும் பார்க்க நீண்ட காலநிதி திட்டமிடல் கட்டமைப்பில் ஆற்றல் மிக்க விதத்தில் அது தனது நிலையைப் பதித்துள்ளது. இந்த வர்த்தக நாமத்தை ஒரு எதிர்கால வரைவிலக்கணத்தை வகுப்பதில் மூலோபாய முறையில் அதைக் கட்டி எழுப்பவும் செலிங்கோலைஃப்பால் முடிந்துள்ளது. வர்த்தகநாமப் பெறுமதியை உருவாக்குவது என்பது ஒரு நீண்டகால செயற்பாடாகும். ஒரு புதிய சேவையின் அறிமுகம் தொடக்கம் ஊழியர் ஈடுபாடுவரைக்கும் எல்லா விடயங்களையும் இது உள்ளடக்கி உள்ளது. இது வர்த்தகநாமத்தின் அனுபவத்தை உரிய நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதிலும் ஈடுபாடு கொண்டது´ என்று கூறினார்.

கொழும்பு பங்குச் சந்தையில் வரிசைப் படுத்தப்பட்டுள்ள வர்த்தக முத்திரைகளை அடிகப்படையாகக் கொண்டே பிறேண்ட் பினான்ஸ் தனது வரிசைப்படுத்தலை மேற்கொள்ளுகின்றது. ISO 10668 தரப்படுத்தல் முறையின் கீழ் உலகளாவிய ரீதியில் கம்பனிகள் பயன்படுத்தும் உரிய நியமங்களைப் பிரயோகித்து இது மேற்கொள்ளப்படுகின்றது.

உலகின் முன்னணி சுதந்திர வர்த்தக நாமப்பெறுமதி ஆலோசனை சேவை நிறுவனமான பிறாண்ட் பினான்ஸ் வர்த்தக முத்திரைப் பெறுமானங்களை அதிகரிப்பது தொடர்பாக மிக உறுதியான ஆலோசனைகளை வழங்கி வருகின்றது. வர்த்தகநாமப் முகாமைத்துவம் தொட்டுணர முடியாத சொத்துக்களின் முகாமைத்துவம் என்பனவற்றைப் பேணுவதன் ஊடாக இந்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. 1996ல் ஸ்தாபிக்கப்பட்ட பிறாண்ட் பினான்ஸ் உலகம் முழுவதும் ஆயிரக் கணக்கான வர்த்தக முத்திரைகளையும் தொட்டுணர முடியாத சொத்துக்களையும் கையாண்டுள்ளது. இவற்றின் பெறுமதி ட்ரில்லியன் கணக்கான டொலராகும். சர்வதேச வர்த்தக முத்திரை உரிமையாளர்கள், வரி அதிகாரிகள், புலமைச் சொத்து சட்டத்தரணிகள், முதலீட்டு வங்கியாளர்கள் என பல பெறுமதி மிக்க வாடிக்கையாளர்களை இது உள்ளடக்கியது.

லண்டனில் தலைமையகத்தைக் கொண்டுள்ள பிறாண்ட் பினான்ஸ் கொழும்பு அலுவலகம் உற்பட சர்வதே சரீதியான அலுவலக வலையமைப்பைக் கொண்டதாகும். கொழும்பு அலுவலகம் அதன் ஒரு கிளை நிறுவனமாகும். 2004 முதல் அது இலங்கையில் செயற்படுகின்றது.

2018ம் ஆண்டு முடிவை 118 பில்லியன் ரூபா சொத்துக்களோடு நிறைவு செய்துள்ள செலிங்கோலைஃப் இந்தக் காலப் பகுதயில் 29.21 பில்லியன் ரூபா வருமானத்தையும், 17.8 பில்லியன் ரூபா கட்டுப்பண வருமானத்தையும், 88.05 பில்லியன் ரூபா ஆயுள் நிதியத்தையும், முதலீட்டுப் பெறுமானங்களாக 103 பில்லியன் ரூபவையும், தேறிய இலாபமாக 5.79 பில்லியன் ரூபாவையும் கொண்டுள்ளது.

வேர்ள்ட் பினான்ஸ் சஞ்சிகையால் 2018ம் ஆண்டில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இலங்கையின் மிகச் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாகத் தெரிவு செய்யப்பட்ட செலிங்கோலைஃப் கடந்த 13 வருடங்களாக தொடர்ந்து SLIM – Neilson விருது வழங்கும் விழாவில் மிகவும் பிரபலமான காப்புறுதி நிறுவனமாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநாட்டில் அதன் 31 வருட செயற்பாட்டில் 15 வருடங்களாக நாட்டின் காப்புறுதி சந்தைத் துறையில் தலைமை தாங்கும் நிறுவனமாகவும் அது செயற்படுகின்றது. கிட்டத்தட்ட பத்து லட்சம் செயற்படுநிலையில் உள்ள காப்புறுதிக் கொள்கைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம் உள்ளுர் ஆயுள் காப்புறுதித் துறையில் புதிய கண்டுபிடிப்புகள், அபிவிருத்தி, வாடிக்கையாளர் சேவை, தொழிற்சார் அபிவிருத்தி, கூட்டாண்மை சமூகப் பொறுப்பு என்பனவற்றுக்கும் புகழ் பூத்த நிறுவனமாகும்.