Back to Top

2 வது ஆண்டாகவும் ஏ.சி.ஈ.எப்-இன் 'ஆண்டின் சிறந்த சமூக ஊடக வணிகக்குறி' விருதை வென்றது கொமர்ஷல் வங்கி

2 வது ஆண்டாகவும் ஏ.சி.ஈ.எப்-இன் 'ஆண்டின் சிறந்த சமூக ஊடக வணிகக்குறி' விருதை வென்றது கொமர்ஷல் வங்கி

May 22, 2019  12:28 pm

Bookmark and Share
மும்பையில் இடம்பெற்ற 8 ஆவது பூகோள வாடிக்கையாளர் கலந்துரையாடல் மன்றம் மற்றும் விருதுகள் நிகழ்வில், தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகவும், ´2019 ஆம் ஆண்டின் சிறந்த சமூக ஊடக வணிகக்குறி´ என்ற விருதை, கொமர்ஷல் வங்கி வென்றது. சுவிற்ஸர்லாந்தின் சுற்றுலாத்துறையுடன் இணைந்து தங்க வெற்றியாளராக, வங்கி தெரிவானது.

ஆசிய வாடிக்கையாளர் கலந்துரையாடல் மன்றத்தால் (ஏ.சி.ஈ.எப்) வழங்கப்படும் கௌரவத்துக் குரிய ´கிரான்ட் பிறிக்ஸ்´ விருதான இது, இதற்கு முன்னைய ஆண்டில் தமது இலக்காக அமையும் வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடவும் ஊக்குவிக்கவும் செயற்றிறன், புத்தாக்கம், 5 சமூக ஊடகவலையமைப்புகளின் புத்துணர்ச்சியுடனான பயன்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தியமைக்காக அங்கீகாரம் வழங்குகிறது.

பேஸ்புக், வைபர் பகிரங்கஅரட்டை, இன்ஸ்டாகிராம், யூடியூப், லிங்க்டின் ஆகியவற்றில் தூண்டலை ஏற்படுத்தக் கூடிய கருத்திட்டங்கள் புதியதும் வித்தியாசமானதுமான தோற்றம், உணர்வு ஆகியவற்றைப் பயன்படுத்தி, இளைய சமூகத்தை சமூக ஊடகவலையமைப்புகளில் தேடி, தனக்கெனத் தனியான இடமொன்றை கொமர்ஷல் வங்கி தேடிப்பிடித்துள்ளது. வங்கியுடன் உரையாடுவதற்கான வாய்ப்பை அது வழங்குவதோடு, பொருத்தமானதும் பயன்தரக் கூடியதும் ஊக்குவிக்கக் கூடியதுமான தகவல்களை வழங்கி, வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடுகிறது. மனிதத்தின் உணர்வையும் தேசத்தின் உணர்வையும் வெளிப்படுத்துகின்றதும் புதிய சமூக ஊடகக் கலாசாரத்தை உருவாக்க எதிர்பார்ப்பதுமான, இலங்கையின் இளைய சமுதாயத்துடன் பலமான உணர்வாலான தொடர்பைக் கொண்டதாக, வங்கியின் தொடர்பாடல்கள் அமைகின்றன.

வங்கியின் இந்த நடவடிக்கையின் வெற்றியாக, இலங்கையிலுள்ள அனைத்து வங்கிகளிலும், பேஸ்புக்கில் விளம்பரமன்றிய அதிகளவு வீச்சத்தைக் (likes/reactions) கொண்ட வங்கியாக கொமர்ஷல் வங்கி காணப்படுகின்றமை அமைகின்றது. ´ஒவ்வொரு வாடிக்கையாளர் அல்லது எதிர்கால வாடிக்கையாளராகுவதற்கான வாய்ப்பைக் கொண்ட வருடனான ஒவ்வொரு தொடர்பாடலையும், அது முகத்துக்கு நேரே சந்திப்பதாக இருந்தாலென்ன, இணையம் மூலமானதாக இருந்தாலென்ன, சமூக ஊடகங்கள் மூலமானதாக இருந்தாலென்ன, நாம் விசேடமாகக் கருதுகிறோம்´ என, கொமர்ஷல் வங்கியின் சந்தைப்படுத்தலுக்கான பிரதிப் பொது முகாமையாளர் திரு. ஹஸ்ரத் முனசிங்க தெரிவித்தார். ´இலங்கையின் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் முழுமையாக முதலிட்டுள்ள ஒரு வங்கியாக, நாங்கள் சேவையை வழங்கும் ஒவ்வொரு பிரிவுச் சனத்தொகை தொடர்பிலும் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருப்பதோடு, இளைஞர்களுக்கு உயர் முன்னுரிமையை வழங்குகிறோம். எமது சமூக ஊடக உத்தியின் வெற்றியை இது அங்கீகரிப்பதுடன், அதன் காரணமாக மிகப் பெரிய திருப்தியை இது வழங்குகிறது´ என அவர் மேலும் தெரிவித்தார்.

விருதுக்காகக் கணிக்கப்பட்ட ஆண்டில், 20 க்கும் மேற்பட்ட சமூக ஊடக பிரசாரத் திட்டங்களை, கொமர்ஷல் வங்கி நடத்தியிருந்தது. அவை பேஸ்புக்கிலும் யூடியூப்பிலும் முக்கியமாக நடத்தப்பட்டிருந்தன. அழகான இலங்கையொன்றைக் கட்டியெழுப்புவோம், பசுமையான இலங்கையொன்றைக் கட்டியெழுப்புவோம், அசலான இலங்கையர்கள் நாம், தேசத்தின் உணர்வுடன், பெருமைக்குரிய இலங்கையர்கள் நாம்ளூ அழகான இலங்கை / கிரிக்கெட் சொர்க்கம், மனிதத்தின் வாரம், உண்மை அன்பின் வாரம், சிங்கள - தமிழ்ப் புத்தாண்டு, வெசாக் தம்மபத, அன்னையர் நாள், தந்தையர் நாள், மகளிர் நாள், சிறுவர் நாள், டொட்கொம் ஃபீபாசவால், 90களுக்கு மீண்டும் - இலங்கையர்களின் பிள்ளைப் பருவத்தைக் கொண்டாடுதல், சிக்கனநாள், கிறிஸ்மஸ், கலையையும் இயற்கையையும் பாரம்பரியங்களையும் கலாசாரங்களையும் வியத்தல் போன்ற பிரசாரத் திட்டங்களும் தொடரான ஆலோசனை வழங்கும் பதிவுகளும், வங்கியால் பகிரப்பட்ட அதிக கலந்துரையாடலை ஏற்படுத்திய பதிவுகளாகும்.

இந்த வகையிலான ஊக்குவிப்புப் பிரசாரத் திட்டங்களும் பதிவுகளும் காரணமாக, 2018 ஆம் ஆண்டில் கொமர்ஷல் வங்கியின் பேஸ்புக் பக்கம் மிகச் சிறந்த அடைவுகளைப் பெற்றுக் கொடுத்தன. கடந்தாண்டில் அவ்வங்கியின் பேஸ்புக் பக்கத்துக்குக் கிடைத்த 41.6 மில்லியனுக்கும் மேற்பட்ட தாக்கங்கள் (likes/reactions) - இது 2016 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது கிட்டத்தட்ட மூன்றரை மடங்குகள் அதிகம், 1.4 மில்லியனுக்கும் மேற்பட்ட விருப்புகள் அல்லது வேறுவகையான பதில்கள் (likes/reactions) - இது, இரண்டு ஆண்டுகளில் 5 மடங்குக்கும் அதிகமான அதிகரிப்பு, பேஸ்புக் பக்கத்தை விரும்பியோரின் எண்ணிக்கை 338,000 ஆக அதிகரிப்பு - இது, 2016 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது மூன்று மடங்கு அதிகரிப்பு போன்றவை உள்ளடங்குகின்றன. பதிவுகளைப் பகிர்வோரின் எண்ணிக்கையும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது எனவும் வங்கி தெரிவித்தது.

வங்கியின் பகிரங்கவைபர் அரட்டைக் கணக்கு, பெப்ரவரி 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதோடு, 2018 ஆம் ஆண்டின் முடிவில் 88,000 பின் தொடர்பவர்களைக் கொண்டிருந்தது. இது, இலங்கையில் பகிரங்கவைபர் அரட்டையைக் கொண்டிருக்கும் வங்கிகளில் அதிக பின் தொடர்பவர் எண்ணிக்கையாகும். வங்கியின் உத்தியோகபூர்வ யூடியூப் அலைவரிசையானது, 2018 ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிவ ரை, 339,900 நிமிடங்கள் பார்க்கப்பட்டிருந்தது. வங்கியின் லிங்க்டின் பக்கம், ஜனவரி 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதோடு, 16,000 க்கும் மேற்பட்ட பின் தொடர்பவர்களைப் பெற்று, இலங்கையின் நிதியியல் சேவைகள் பிரிவில் அதிகபின் தொடர்பவர்களைக் கொண்ட பக்கமாகக் கடந்தாண்டு இறுதியில் மாறியிருந்தது.

உலகின் முதல் 1,000 வங்கிகள் என்ற பட்டியலில், தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் இடம்பிடித்த இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி, இலங்கையில் 266 கிளைகளையும் 830 ஏ.டி.எம்-களையும் இயக்குகிறது. கொமர்ஷல் வங்கி, 2016 ஆம் ஆண்டிலும் 2017 ஆம் ஆண்டிலும், சர்வதேச, உள்நாட்டு விருதுகள் என, பல்வேறு விருதுகளை வென்றிருந்ததோடு, 2018ஆம் ஆண்டில், 40க்கும் மேற்பட்ட சர்வதேச, உள்நாட்டு விருதுகளை வென்றிருந்தது.

பங்களாதேஷில் 19 நிலையங்களைச் செயற்படுத்துவதோடு, யாங்கோனில் பிரதிநிதித்துவ அலுவலகமும் நைப்பியிடோவில் நுண்நிதிநிறுவனமுமென மியான்மாரிலும், முழுமையான வசதிகளைக் கொண்ட, பெரும்பான்மைப் பங்குடைமையைக் பிரிவு 1 வங்கியை மாலைதீவுகளில் என, கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் விரிந்து காணப்படுகின்றன.