Back to Top

குழு மோதலில் சூட்டியா பலி

குழு மோதலில் சூட்டியா பலி

May 22, 2019  02:11 pm

Bookmark and Share
கிரான்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஹெரகொல்ல, கம்பிதொட்டுவ பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (21) இரவு 10.50 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோதலில் காயமடைந்த மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெல்லம்பிட்டிய, ஒருகொடபுர பகுதியை சேர்ந்த 46 வயதுடைய சுகத் இந்திரஜித் எனும் சூட்டியா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிரான்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.