Back to Top

ஜனாதிபதி தஜிகிஸ்தான் நோக்கி பயணமானார்

ஜனாதிபதி தஜிகிஸ்தான் நோக்கி பயணமானார்

June 13, 2019  11:04 am

Bookmark and Share
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் தஜிகிஸ்தான் நோக்கி பயணமாகியுள்ளார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அவர் சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

தஜிகிஸ்தான், துஷான்பேகி நகரில் நடைபெற உள்ள ஆசியாவின் நம்பகத் தன்மை மற்றும் ஒருங்கினைவை கட்டியெழுப்புவதற்கான அரச தலைவர்களின் மாநாட்டின் 5 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காவே ஜனாதிபதி சென்றுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அந்நாட்டின் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்களும் இடம்பெற உள்ளன.