Back to Top

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் வரை ஒத்திவைப்பு

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் வரை ஒத்திவைப்பு

June 13, 2019  02:15 pm

Bookmark and Share
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஒத்தி வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாரச்சி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையின் போது மஹிந்தானந்த அளுத்கமகேவின் பாராளுமன்ற கிளை இலங்கை வங்கியில் உள்ள வங்கிக் கணக்கு சம்பந்தமாக வங்கியின் அதிகாரி ரொஹான் ஒவிட்டிகல சாட்சியமளித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

இதன்போது மஹிந்தானந்த அளுத்கமகேவின் சட்டத்தரணியால் சாட்சியாளரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட 274 இலட்சம் ரூபா பணத்தைப் பயன்படுத்தி பொரள்ளை - கிங்சி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.

Most Viewed