Back to Top

யாழ். நாக விஹாரையில் பொசொன்

யாழ். நாக விஹாரையில் பொசொன்

June 14, 2019  01:50 pm

Bookmark and Share
உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக, யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பொசொன் நிகழ்வுகள் இன்று (14) காலை 11 மணி அளவில் யாழ். நாக விஹாரையில் இடம்பெற்றது.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில், நாக விஹாரை விகாராதிபதி ஸ்ரீவிமல தேரரே பூஜை வழிபாடுகளை ஆரம்பித்து வைத்தார்.

இதன் பின்னர், அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், சங்கைக்குரிய தேரர்களுக்கு தானம் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட செயலக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

(யாழ். நிருபர் சுமித்தி)