Back to Top

சிறுத்தீவு பகுதியில் பெருமளவு அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு

சிறுத்தீவு பகுதியில் பெருமளவு அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு

June 14, 2019  03:49 pm

Bookmark and Share
யாழ். நகா் பகுதியை அண்டிய சிறுத்தீவு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருட்களை படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து மீட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த அபாயகரமான வெடிபொருட்கள் இன்று (14) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸாா் மற்றும் இராணுவத்தினா் இணைந்து இந்த சோதனையை நடாத்தியிருந்தனர்.

இதன்போது மிக அபாயகரமான பெருந்தொகை வெடிபொருட்களை பொலிஸாா் மீட்டுள்ளனர்.

இதனுள் டெட்டனேட்டா்கள், சீ - 4 வெடி மருந்து மற்றும் பல வெடிபொருட்கள் பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

(யாழ். நிருபர் பிரதீபன்)