Back to Top

கைது செய்யபட்ட முஸ்லிம் வைத்தியருக்கு 28 ஆம் திகதி வரை விளக்கமறியல்

கைது செய்யபட்ட முஸ்லிம் வைத்தியருக்கு 28 ஆம் திகதி வரை விளக்கமறியல்

June 14, 2019  05:29 pm

Bookmark and Share
தலவாக்கலை நகரில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றினை நடாத்தி வந்த முஸ்லிம் வைத்தியரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலியா நீதிமன்ற நீதவான் பிரமோதய ஜயசேகர உத்தரவிட்டுள்ளார்.

நீதவான் நீதிமன்றில் இன்று (14) வெள்ளிக்கிழமை குறித்த வைத்தியரை முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

போலியான ஆளனங்களை வைத்து கொண்டு, தலவாக்கலை - லிந்துலை நகர சபைக்கு உட்பட்ட தலவாக்கலை மத்திய நகரில் தனியார் வைத்தியசாலை ஒன்றை நடாத்தி வந்தமை தொடர்பில் குறித்த வைத்தியர் நேற்று கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யபட்டவர் 48 வயதுடைய தம்பி மரிக்கார் மொஹமட் இஸ்மையில் என பொலிஸார் தெரிவித்தனர்.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)