Back to Top

வீசிய கடும் காற்றினால் வீடுகளுக்கு பலத்த சேதம்

வீசிய கடும் காற்றினால் வீடுகளுக்கு பலத்த சேதம்

June 17, 2019  11:06 am

Bookmark and Share
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று மாலை வீசிய கடும் காற்று காரணமாக 20 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடிமுழக்கம் மற்றும் காற்றுடன் மழை பெய்த நிலையில் வவுணதீவில் வீடுகள் சேதமடைந்துள்ளன.

வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொத்தியாபுல, தாமரைக்கேணி, இழுப்படிச்சேனை, நாவல்தோட்டம், காஞ்சிரங்குடா உட்பட பல பகுதிகளில் கடும் காற்றினால் சேதமடைந்துள்ளன.

10 க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையான சேதமடைந்துள்ளதுடன் 15 க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடும் காற்றினால் மரங்கள் முறிந்து வீடுகளில் வீழ்ந்ததனால் அதிகளவான வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் சில பகுதிகளில் மின்சார கம்பங்களும் உடைந்து வீழ்ந்ததினால் மின்சாரமும் தடைப்பட்டிருந்தது.

இதன்போது மின்சார சபையினால் மின் துண்டிக்கப்பட்டு மின்சாரத்தினை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

(மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்)