Back to Top

மிகவும் தந்திரமான முறையில் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட குழு சிக்கியது

மிகவும் தந்திரமான முறையில் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட குழு சிக்கியது

June 17, 2019  04:55 pm

Bookmark and Share
நாட்டிலுள்ள ஆலய வைபவங்களுக்கு சென்று பெண்களின் தங்க சங்கிலிகளை திட்டமிட்டு திருடும் பெண்கள் அடங்கிய குழு ஒன்றை சந்தேகத்தின் பேரில் நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டி கடியன்லென ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவின் போது இவர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர். இதன்போது பக்தர்கள் இவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களுள் ஆறு பேர் அங்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் 23 மற்றும் 28 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிலாபம், வத்தேகம, வாழைச்சேனை, புலத்சிங்கள ஆகிய பகுதிகளை சேர்ந்த தமிழர்கள் என தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நல்லூர் உள்ளிட்ட நாட்டின் பிரதேசங்களில் இடம்பெறும் ஆலய வைபவங்களுக்கு சென்று மிகவும் தந்திரமான முறையில் தங்க ஆபரணங்களை களவாடுவதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில் இருந்து தெரிய வருகின்றது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)