Back to Top

திடீர் மின் துண்டிப்பை அறிவிப்பதற்கு புதிய  APP அறிமுகம்

திடீர் மின் துண்டிப்பை அறிவிப்பதற்கு புதிய APP அறிமுகம்

June 17, 2019  10:42 pm

Bookmark and Share
மின் துண்டிப்பு குறித்து உடனடியாக அறிவிப்பதற்காக புதிய தொலைபேசி எப் அறிமுகப்படுத்த இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனூடாக மின்சார கட்டணத்தை செலுத்துதல் மின் துண்டிப்பு தொடர்பான அறிவித்தல் முறைப்பாடுகள் முதலான பிரிவுகள் தொடர்பிலான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் எத்தகைய இடங்களிலும் இடம்பெறும் மின்துண்டிப்புகள் குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிப்பதற்கு இதன் மூலம் வசதி கிடைக்கின்றது.

இலங்கை மின்சார சபையின் 50ஆவது ஆண்டின் நிறைவுக்கு அமைவாக மின்சார பாவனையாளர்களுக்கு மிகவும் செயன்திறன்மிக்க சேவைகளை வழங்குவதற்காக கையடக்க தொலைபேசி மூலமான செயலிகளை பயன்படுத்துவதற்கு மின்சாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)