Back to Top

World cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கிய பங்களாதேஷ்

World cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கிய பங்களாதேஷ்

June 18, 2019  04:43 am

Bookmark and Share
மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிய உலகக்கிண்ண தொடரின் 23-வது லீக் ஆட்டம் டான்டனில் நடைபெற்றது.

நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி தலைவர் மோர்தசா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி துடுப்பெடுத்தாடத்தை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 321 ஓட்டங்கள் எடுத்தது. ஷாய் ஹோப் 96 ஓட்டங்களும், எவின் லிவிஸ் 70 ஓட்டங்களும், ஹெட்மயர் 50 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் 322 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பங்களாதேஷ் அணியின் சார்பில் தமிம் இக்பால் மற்றும் சவுமியா சர்கார் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். துவக்கத்திலே அதிரடி காட்டிய சவுமியா சர்கார் 29(23) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக தமிம் இக்பாலுடன், ஷகிப்-அல்-ஹசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. அதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தமிம் இக்பால் 48(53) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய முஷிபூர் ரகுமான் 1(5) ஓட்டத்தில் கேட்ச் ஆனார்.

அடுத்ததாக ஷகிப்-அல்-ஹசனுடன், லிட்டன் தாஸ் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் ரேட்டை உயர்த்திய இந்த ஜோடியில், ஷகிப்-அல்-ஹசன் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

தொடர்ந்து கலக்கிய இந்த ஜோடியில் லிட்டன் தாஸ் தனது அரைசத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடி, மேற்கிந்திய தீவுகள் அணியினரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

இறுதியில் ஷகிப்-அல்-ஹசன் 124(99) ஓட்டங்களும், லிட்டன் தாஸ் 94(69) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் பங்களாதேஷ் அணி 41.3 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 322 ஓட்டங்கள் எடுத்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரூ ரசல், தாமஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணி அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.