Back to Top

இன்று வழமை போன்று அமைச்சரவைக் கூட்டம்

இன்று வழமை போன்று அமைச்சரவைக் கூட்டம்

June 18, 2019  09:32 am

Bookmark and Share
சற்றுமுன்னர் அமைச்சரவைக் கூட்டம் வழமை போன்று ஆரம்பமானதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இன்று இடம்பெறுகின்றது.

பின்னிணைப்பு (10.05 - மு.ப.)

இன்று காலை வழமை போன்று அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறுகின்ற போதிலும் கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை நிறுத்தும் வரை அமைச்சரவை கூட்டத்தை நடத்துவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வௌியாகியிருந்தன.

எவ்வாறாயினும் வழமை போன்று இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Viewed