Back to Top

30 கிலோ  கேரள கஞ்சா பறிமுதல் - சந்தேக நபர் தப்பி ஓட்டம்

30 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் - சந்தேக நபர் தப்பி ஓட்டம்

June 18, 2019  10:14 am

Bookmark and Share
வல்வெட்டித்துறை, கிருடாவில் பகுதியில் சுமார் 30 கிலோ கிராம் கேரள கஞ்சாவை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

வல்வெட்டித்துறை பொலிஸார் மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனை செய்ய முற்பட்ட போது, அதன் சாரதி பொதி ஒன்றுடன் மோட்டார் சைக்கிளை அவ்விடத்தில் விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதன் போது பொலிஸார் பறிமுதல் செய்த பொதியில் 30 கிலோ மற்றும் 254 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.