Back to Top

181 ஆவது தகவல் தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை மின்னேரியாவிலுள்ள ஆட்லறிப் பாடசாலைக்கு வழங்கியது கொமர்ஷல் வங்கி

181 ஆவது தகவல் தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை மின்னேரியாவிலுள்ள ஆட்லறிப் பாடசாலைக்கு வழங்கியது கொமர்ஷல் வங்கி

June 18, 2019  10:35 am

Bookmark and Share
முழு உபகரணங்களுடனும் முழுமையான தளபாடங்களுடனும் கூடிய தகவல் தொழில்நுட்ப ஆய்வு கூடமொன்றை, மின்னேரியாவிலுள்ள இலங்கை ஆட்லறிப் படைப்பிரிவின் ஆட்லறிப் பாடசாலையில், கொமர்ஷல் வங்கி ஏற்படுத்தியுள்ளது.

தேசிய கணினி அறிவு மட்டத்தை அதிகரிப்பதற்காக, கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ் அவ்வங்கி மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக, அவ்வாறான 181 ஆவது தகவல் தொழில்நுட்ப ஆய்வு கூடமாக இது அமைந்துள்ளது.

இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் மென்திறன்களை முன்னேற்றுவதற்காக, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் பாடங்களை வழங்கும் நோக்கத்துடனேயே, இந்த அன்பளிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகள், ஆட்லறிப் படைப் பிரிவைச் சேர்ந்த ஏனைய தரத்தைச் சேர்ந்தோர், கொமாண்டோக்கள் போன்ற விசேட நடவடிக்கை அணிகள், காலாட்படைத் துருப்புகள் போன்ற விசேடபடைகள் என, சுமார் 750 பேருக்கு இப்பாடசாலையில் பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தகவல் தொழில்நுட்பம் சம்பந்தமான பாடங்களைக் கற்பிப்பதற்காகக் காணப்படும் இரண்டு வகுப்பறைகளில், இந்தத் தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம், வங்கியால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கூடத்தில் 10 கணினிகள், ஒரு பிறின்டர், தேவையான மேசைகள், கதிரைகள், மின்னியல் கட்டமைப்புகள், வலையமைப்புக் கட்டமைப்புகள் ஆகியன காணப்படுகின்றன.