Back to Top

செலிங்கோ ஹெல்த்கெயார் நிலையத்தின் மருத்துவ இயற்பியலாளருக்கு சுவிட்ஸர்லாந்தில் பயிற்சி

செலிங்கோ ஹெல்த்கெயார் நிலையத்தின் மருத்துவ இயற்பியலாளருக்கு சுவிட்ஸர்லாந்தில் பயிற்சி

June 18, 2019  10:50 am

Bookmark and Share
செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விசஸ் லிமிட்டெட் நிறுவனம், அதனுடைய கதிரியக்கச் சிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த மருத்துவ இயற்பியலாளரான (medical physicist) திரு. ஜயந்தகுணரத்னவை, பயிற்சித் திட்டமொன்றுக்காக சுவிட்ஸர்லாந்துக்கு அனுப்பியிருந்தது. கதிரியக்கப் புற்றுநோய் சிகிச்சையியலில் பூகோள ரீதியில் முன்னிலையில் உள்ளவேரியன் மெடிக்கல் சிஸ்டம்ஸ் இன்டர்நஷனல் ஏ.ஜி (Varian Medical Systems International AG) நிறுவனம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

செலிங்கோ ஹெல்த்கெயார் நிறுவனத்தின் கதிரியக்கச் சிகிச்சை நிலையத்தில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக உயர் துல்லியக்கம் கொண்ட Clinac® iX சிகிச்சை முறை கடந்தாண்டு ஆரம்பிக்கப்பட்ட பின்னணியிலேயே, திரு. குணரத்னவுக்கான இந்தப் பயிற்சி இடம்பெற்றுள்ளது.

´Varian Advanced Techniques Physics IMRT/RapidArc," எனத் தலைப்பிடப்பட்ட இந்தப் பயிற்சித் திட்டம், நான்கு நாட்களாக இடம்பெற்றது. இதில்,வகுப்பறையில் இடம்பெற்ற விரிவுரைகளும் சுவிட்ஸர்லாந்தின் ட்ரியேம்லி மாநகர வைத்தியசாலையில் இடம்பெற்ற களப் பயிற்சிகளும் உள்ளடங்கியிருந்தன. Varian’s Intensity Modulated Radiotherapy (IMRT) கட்டமைப்பை ஆரம்பிப்பதற்கும் அதன் நுட்பங்களை அமைப்பதற்குமான பயிற்சிகளை இந்தக் கற்கைநெறி கொண்டிருந்தது.

சிகிச்சைநுட்பச் செயன்முறை, தர உறுதிப்பாட்டுச் செயற்பாடுகள், சிகிச்சைத் திட்டமிடல் உத்திகள் போன்றன தொடர்பிலான முழுமையான புரிதலை வழங்குவதற்கு இந்தக் கற்கைநெறி எதிர்பார்க்கிறது. இந்தக் கற்கைநெறி மூலமாகத் தமது சிகிச்சைகளில் IMRT/RapidArc®, Portal Dosimetry ஆகியவற்றை அமுல்படுத்துவதற்கு இயலுமாக இருக்குமென நிறுவனம் தெரிவித்தது.

´இலங்கையர்கள் தமது சொந்த நாட்டிலேயே மிகவும் முன்னேற்றகரமான கதிரியக்கச் சிகிச்சைகளைப் பெறுவதற்காக, அதிநவீன மருத்துவக் கருவிகளில் நாங்கள் முதலீடு செய்துள்ளோம்´ எனத் தெரிவித்த செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விசஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் திரு. ஆர்.ரெங்கநாதன், ´கதிரியக்கச் சிகிச்சையைப் பொறுத்தவரை தனியார் துறையில் அதி சிறந்த நிலையமாக உள்ள நிலையில், இந்தக் கருவிகளின் உயர்ந்த மட்ட நன்மைகளைப் பெறுவதற்கு வழிவகுக்க வேண்டுமாக இருந்தால், எங்களது இயற்பியலாளர்களும் தொழில்நுட்பவியலாளர்களும் உலகத்தர மிக்க பயிற்சிகளைப் பெறுவது அவசியமானது´ எனவும் தெரிவித்தார்.

செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விசஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் கடந்த 11 ஆண்டுகளாக மருத்துவ இயற்பியலாளராக திரு. ஜயந்தகுணரத்ன இருந்து வந்தார். இலங்கை அணுசக்தி அதிகாரசபையில் விஞ்ஞான அதிகாரியாக அவர் இதற்கு முதல் தசாப்தகாலமாகப் பணியாற்றியிருந்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து பௌதீகவியலில் இள விஞ்ஞானமாணி (விசேடம்) பட்டத்தையும், பேராதனைப் பல்கலைக்கழத்தின் விஞ்ஞானத்துக்கான பட்டப்பின் நிறுவகத்திலிருந்து முது விஞ்ஞானமாணிப் பட்டத்தையும் அவர் கொண்டுள்ளார்.

அதேபோல், மலேஷியாவின் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து கதிரியக்கப் பாதுகாப்புக்கான பட்டப்பின் டிப்ளோமா ஒன்றையும் அவர் கொண்டுள்ளார்.

உலகம் முழுவதிலும் 7,400 க்கும் மேற்பட்ட லீனியர் எக்சலேட்டர்கள் காணப்படும் நிலையில், அவற்றில் சுமார் 200, இந்தியாவிலிருந்து செயற்படுகின்றன. கதிரியக்கப் புற்றுநோயியல் சிகிச்சை தொடர்பாக பூகோள, பிராந்திய அனுபவத்தை, வேரியன் மருத்துவக் கட்டமைப்புகள் கொண்டிருக்கின்றன. Varian ClinaciX இயந்திரம், சிகிச்சையைச் சீராக்குவதோடு, மருத்துவக் கிளினிக்குகள் மேற்கொள்ளக் கூடிய சிகிச்சைகளை விரிவுபடுத்துகின்றன.

நாட்டிலுள்ள மிகவும் அனுபவம் மிக்கதும் குறைந்த செலவிலானதுமான தனியார் புற்றுநோய்ச் சிகிச்சை நிலையமான செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விசஸ் நிறுவனம், 5,000 க்கும் மேற்பட்ட நோயாளர்களுக்குக் கதிரியக்கச் சிகிச்சையை வழங்கியுள்ளது. இந்நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள சிகிச்சை வசதிகள், அந்நியச் செலாவணியாக 500,000 ஐக்கிய அமெரிக்க டொலரை ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது இரண்டு கதிரியக்கச் சிகிச்சைப் பிரிவுகளான செலிங்கோ கதிரியக்கச் சிகிச்சை நிலையம், செலிங்கோடுமோ தெரபி நிலையம் ஆகியவற்றுக்கு மேலதிகமாக, செலிங்கோ நீரிழிவு நிலையத்தையும், செலிங்கோ ஹெல்த்கெயார் நிறுவனம் நடத்துகிறது. இதன் மூலமாக, முழுமையான சோதனை, நோயைக் கண்டுபிடித்தல் சேவைகளையும் மருத்துவப் பராமரிப்பும் வழங்கப்படுகிறது.