Back to Top

இன்று மீண்டும் கூடுகிறது பாராளுமன்ற தெரிவுக்குழு

இன்று மீண்டும் கூடுகிறது பாராளுமன்ற தெரிவுக்குழு

June 18, 2019  12:20 pm

Bookmark and Share
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழுவின் அமர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இன்று தெரிவுக்குழு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் தலைமையில் அமர்வு இடம்பெறவுள்ளது.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் நிலையத்தின் தற்போதைய பொறுப்பதிகாரி ஆகியோர் இன்றைய தினம் சாட்சியம் அளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர முஸ்லிம் செயற்பாட்டாளர்கள் சிலரும் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிப்பதற்காக இன்றைய தினம் அழைக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி கூறியுள்ளார்.