Back to Top

மலையக வைத்தியசாலைகளின் குறைபாடுகளுக்கு ஒரு மாத காலப் பகுதியில் உரிய தீர்வு

மலையக வைத்தியசாலைகளின் குறைபாடுகளுக்கு ஒரு மாத காலப் பகுதியில் உரிய தீர்வு

June 18, 2019  03:42 pm

Bookmark and Share
மலையகத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சா் ராஜித்த சேனாரத்ன தீர்வினை பெற்றுதருவதாக உருதியளித்துள்ளதாக, தேசிய மக்கள் பேரவையின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் டி.என். ஜனாஸ்ட்டர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் பேரவையினருக்கும் அமைச்சருக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பு, பத்தரமுள்ள இல்லத்தில் நேற்று (17) நடைபெற்ற போதே அமைச்சர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது மலையகத்தில் உள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் குறைப்பாடுகளை அமைச்சரிடம் சுட்டிக்காட்டியதுடன், பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் தொடரும் குறைபாடுகள் பற்றும் மஸ்கெலியா வைத்தியசாலையில் நிலவும் வைத்தியா்கள் தொடர்பான குறைபாடுகள் தொடா்பாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார்.

குறைபாடுகளை கேட்றிந்த அமைச்சர் ஒரு மாதகாலப் பகுதியில் உரிய தீர்வினை பெற்றுத்தருவதாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

(மலையக நிருபர் இராமச்சந்திரன்)