Back to Top

காமினி செனரத்துக்கு எதிரான வழக்கில் பிரதிவாதிகளின் தொகுப்புரை 20ம் திகதி

காமினி செனரத்துக்கு எதிரான வழக்கில் பிரதிவாதிகளின் தொகுப்புரை 20ம் திகதி

June 18, 2019  04:00 pm

Bookmark and Share
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு, கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது வழக்கு தொடர்பான சட்டமா அதிபரின் இறுதி தொகுப்புரை இன்று இடம்பெற்றது.

இது தொடர்பான மனு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று (14) விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

அரச தரப்பின் தொகுப்புரை இன்று நிறைவு செய்யப்பட்டதுடன், பிரதிவாதிகள் சார்பான தொகுப்புரை எதிர்வரும் 20ம் திகதி நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி வரையான காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகள் குற்றமிழைத்துள்ளதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் நில் பண்டார ஹபுகின்ன என்ற பிரதிவாதியை விடுதலை செய்வதற்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.