Back to Top

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது ஆண்டு நிறைவு

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது ஆண்டு நிறைவு

June 18, 2019  04:18 pm

Bookmark and Share
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் இன்று இடம்பெற்றது.

விசேட பூஜை வழிபாடுகள் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி கலந்து கொண்டார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி, நாங்கள் இனங்களுக்கிடையில் இன ஐக்கியத்தினை கட்டியெழுப்பும் வகையில் இந்த நாளை எதிர்கூறுகின்றோம்.

மேலும், எங்களால் முடிந்தளவு தமிழ் மக்களுடன் இன ஐக்கியத்திற்கு ஒன்றித்து போவதற்கு முடிந்தளவு ஒத்துழைப்புகளை வழங்குவோம் என அவர் தெரிவித்தார்.

இதில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

(யாழ். நிருபர் ரமணன்)