Back to Top

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மூன்று தேவாலயங்களின் புனரமைப்பு பணிகளுக்கு INSEE சீமெந்து உதவி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மூன்று தேவாலயங்களின் புனரமைப்பு பணிகளுக்கு INSEE சீமெந்து உதவி

June 18, 2019  05:04 pm

Bookmark and Share
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் காரணமாக சேதமடைந்த தேவாலயங்களின் புனரமைப்பு பணிகளுக்கு தமது பங்களிப்பை வழங்க INSEE சீமெந்து முன்வந்திருந்தது.

தேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட மொத்த இல்லங்களில் மூன்றில் ஒரு பகுதியில் பயன்படுத்தப்பட்ட முன்னணி சீமெந்து தயாரிப்பான INSEE சீமெந்து, தேசத்தை கட்டியெழுப்புவதில் எப்போதும் தன்னை அர்ப்பணித்துள்ளது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களினால் கொழும்பு, கொச்சிக்கடை புனித. அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு புனித செபாஸ்தியன் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகியன சேதமடைந்திருந்ததுடன், இறை வழிபாடுகளில் ஈடுபட்ட பக்தர்களும் உயிர் தியாகம் செய்திருந்ததுடன், பலர் காயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட தேவாலயங்களை நிர்மாணிப்பதற்கு INSEE சங்ஸ்தா சீமெந்து மற்றும் INSEE கொங்கிறீற் ஆகிய நிறுவனத்தின் ரெடி மிக்ஸ் தயாரிப்புகளை வழங்க நிறுவனம் தனது அர்ப்பணிப்பை வெளியிட்டிருந்ததாக INSEE சீமெந்து ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ´சேதமடைந்த தேவாலயங்களை துரித கதியில் புனரமைப்பு செய்வது, இன, மத வேறுபாடின்றி, இலங்கையின் அனைத்து மக்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஏனெனில் ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்கள் எனும் வகையில், அமைதியாக ஒன்றாக கைகோர்த்து வாழ்வது என்பதில் நாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே, தேவாலயங்களின் புனரமைப்பு பணிகள் தாமதிக்காமல் முன்னெடுக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும்.´ என்றார்.