Back to Top

65% கழிவுச் சலுகையுடன் ஹோட்டல்களில் தங்கும் வாய்ப்பை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி கார்ட் உரிமையாளர்கள்

65% கழிவுச் சலுகையுடன் ஹோட்டல்களில் தங்கும் வாய்ப்பை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி கார்ட் உரிமையாளர்கள்

June 18, 2019  05:26 pm

Bookmark and Share
கொமர்ஷல் வங்கி கிரடிட் கார்ட் உரிமையாளர்களுக்கு இந்தப் பருவகாலத்தில் சுறுசுறுப்பான வாழ்வில் இருந்து சற்று ஆறுதல் அடைவதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. வங்கியின் ´ஈஸிவெகேஷன்´ திட்டத்தின் கீழ் சுமார் 70 ஹோட்டல்களில் 65% கழிவுடன் தங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் இறுதி வரைக்குமான இந்தச் சலுகைகளை W15 அஹங்கம மற்றும் வெலிகம, ஏஸியாலெஷர் ஹோட்டல்ஸ், ஏர்ல்ஸ் ரீப், ஏர்ல்ஸின் கண்டி சிற்றி ஹோட்டல், அனார்வா அனிலானா, த பிளக் பூல், சென்டாராசீ சேண்ட்ஸ் ரெஸோட் அன்ட் ஸ்பா, றோயல் பாம்ஸ் பீச் ஹோட்டல், சீகிரிய ஜன்கில்ஸ், திலங்கவின் சீகிரியானா ரெஸோட், ஸ்கன்டிக் பீச் ரெஸோட், த புளு வேவ் ஹோட்டல், திலங்க ஹோட்டல்ஸ் அன்ட் ரெஸோட்ஸ், ட்ரொபிகல் லைப் ரெஸோட் அன்ட் ஸ்பா, ஊகா பே, ஊகா ஜங்கிள் பீச், அமலோஹ், த ஆர்கிள், லெகூன் பெரடைஸ், லாயா சபாரி, சித்தாலேப ஆயுள் வேத ஹெல்த் ரெஸோட், சங்கிரீன் ரெஸோட் அன்ட் ஸ்பா, அவன்ராபீச், லாயாபீச், லாயாலெஷர், லாயாவேவ்ஸ், கஸண்ட்ராகல்ச்சர் ரெஸோட், ஏர்ல்ஸ் பாசிக்குடா, ஊகாஉலகல்ல அன்ட் மாபகட விலேஜ் ஆகிய இடங்களில் இந்தச் சலுகைகளை அனுபவிக்கலாம்.

இந்த ´ஈஸி வெகேஷன்´ ஊக்குவிப்புத் திட்டம் ஜுன் மாதம் இறுதிவரை அமுல் செய்யப்படும் ஹோட்டல்களிலும் கொமர்ஷல் வங்கி கார்ட் உரிமையாளர்கள் இந்த கழிவுச் சலுகையைஅனுபவிக்கலாம். லூபென்ட்ரா, ஒக்வின் ரெஸோட், றேன்ஜ் கண்டி, அமரன்தே பே ரெஸோட் அன்ட் ஸ்பா, அமாரா சீகிரிய மற்றும் கண்டி, ஹில் கொட்டேஜ், ஸ்கை பெவிலியன், த யால அட்வன்ச்சர், ஓக்வேரெஸோட், த றிச்மண்ட ஹில் ஹொலிடேபங்களோ, வாத்துவபீச் விலா, ஆரீய் லகூன், திக்வெல்ல ரெஸோட் அன்ட் ஸ்பா, த காம் ரெஸோட் அன்ட் ஸ்பா, த ஈடன் ரெஸோட் அன்ட் ஸ்பா, த பெரடைஸ் ரெஸோட் அன்ட் ஸ்பா, மன்தாரா ரோஸன் அன்ட் ரெஸோட், மரியட் ரெஸோட், ஆலியரெஸோட் அன்ட் ஸ்பா, மாலுமாலு ரெஸோட் அன்ட் ஸ்பா, மவுண்ட்பேர்டன் பங்களா, அவானி பென் தொட்ட மற்றும் களுத்துறை, கிளப் ஹோட்டல் டொல்பின், ஹோட்டல் சிகிரியா, ஹோட்டல் கபலானா, ஹிபிஸ்கஸ் பீச் ஹோட்டல், தோதிஸாவின் ஜங்கிள் விலேஜ், கித்தால ரெஸோட், மதுலகலே டீ அன்ட் எகோலொட்ஜ், சுஐரு ஹோட்டல்ஸ் அன்ட் ரெஸோட்ஸ், ஸ்கொட்டிஷ் பிளான்டர் கிளன்ட்வொன் பங்களா, ஷங்கிரிலா அம்பாந்தோட்டை கோல்ப் ரெஸோட் அன்ட் ஸ்பா, த தின்னை விலாதோ திஸா, சூரியாரெஸோட் அன்ட் ஸ்பா, த ரெயின் பொரஸ்ட் எகோலொட்ஜ்,கோரல் சேண்ட் ஹோட்டல்ஸ், த எலிபண்ட் கொரிடோர், பண்டானுஸ் பீச், தாஜ் பென்தொட்டை ரெஸோட் அன்ட் ஸ்பா, ஊரசிலோன், த கிளன் ரொக், மவுண்ட் ஹவானா என்பன இந்தத் திட்டத்தின் கீழ் அடங்கும்.

இவற்றுக்கு மேலதிகமாக பிளக் பெப்பர், கிங் ஒப் த மெம்போ, அன்ட் அன் கோபப் அன்ட் கிச்சன் ஆகிய உணவகங்களிலும் ஜுன் மாத இறுதிவரையிலான கழிவுகளைப் பெறமுடியும் என்று வங்கி அறிவித்துள்ளது. விஸா, டர்கார்ட், யூனியன் பே கார்ட்ஸ் என்பனவற்றால் வழங்கப்படும் சகல விதமான பூகோள ஊக்குவிப்புத் திட்டங்களிலும் கொமர்ஷல் வங்கி கார்ட் உரிமையாளர்களும் உள்வாங்கப்படுகின்றனர். கோம் பேங்க் மெக்ஸ் லோயல்டி விருது புள்ளித் திட்டத்தின் கீழ் பல மேலதிக நன்மைகளையும் அவர்கள் பெறுகின்றனர்.

கொமர்ஷல் வங்கி டெபிட் கார்ட் வருடாந்தம் பல்வேறு சேவைகளை வழங்கும் ஊக்குவிப்புக்களை உள்ளடக்கி உள்ளது. தனது மெக்ஸ் லோயல்டி வெகுமதித் திட்டம் மூலம் கிரடிட் மற்றும் டெபிட் கார்ட் ஆகிய இரண்டுக்கும் வெகுமதிகளை வழங்கும் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்கின்றது. அதேபோல் வழமையாக கிரடிட் கார்ட்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் ஊக்குவிப்பு கழிவு சலுகைகளையும் டெபிட் கார்ட்டுகளுக்கும் வங்கி விஸ்தரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கி அட்டைகள் தான் இலங்கையில் பாவனையில் மிக வேகமான வளர்ச்சி கண்டுவரும் அட்டைகளாகும். விற்பனைப் புள்ளி பாவனையில் வங்கியின் கிரடிட் மற்றும் டெபிட் கார்ட்டுகள் தான் சந்தையில் தலைமை நிலையிலும் உள்ளன. வெள்ளி தங்கம் பிளேட்டினம் என பல பிரிவுகளில் விஸா, மாஸ்டர் கார்ட், விஸா சிக்னேச்சர், வேர்ள்ட் மாஸ்டர் கார்ட் மற்றும் விஸா பிரீமியர் பிரிவில் விஸா இன்பினிட் கார்ட் என பல்வகை கார்ட்டுகளை வங்கி வழங்குகின்றது. இவை அனைத்தும் ´டெப் அன்ட் கோ ´NFC தொழில்நுட்பம் கொண்டவை. மிக உறுதியான NFC விற்பனைப் புள்ளி (NFC ) வலையமைப்பையும் இவை கொண்டுள்ளளன. மெக்ஸ் லோயல்டி வெகுமதித் திட்டம் தான் கிரடிட் மற்றும் டெபிட் கார்ட் ஆகிய இரண்டுக்கும் வெகுமதிகளை வழங்கும் ஒரே வாடிக்கையாளர் திட்டமாகும்.

தொடர்ந்து எட்டு வருடங்களாக உலகின் தலை சிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 266 கிளைகளுடனும், 846 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. வங்கி 2016 மற்றும் 2017ம் ஆண்டு காலப் பகுதியில் பல்வேறு உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 2018 ல் 40 க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளையும் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.