Back to Top

eChannelling இலங்கையின் முதலாவது செயற்கை நுண்ணறிவு சார்ந்த Chatbot இனை அறிமுகப்படுத்துகிறது

eChannelling இலங்கையின் முதலாவது செயற்கை நுண்ணறிவு சார்ந்த Chatbot இனை அறிமுகப்படுத்துகிறது

June 18, 2019  05:38 pm

Bookmark and Share
eChannelling, இலங்கையின் மிகப்பெரிய வைத்திய ஆலோசனை முன்பதிவுகளுக்கான வலையமைப்பு. இது இலங்கையில்; சுகாதார சேவைகள் துறையில் முதன்முறையாக Chatbot இனை அறிமுகப்படுத்தி வைத்தது. இந்த வசதியான முறையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க eChannelling ஆனது உலகின் Autochatic, உருவாக்கிகள் உடன் கைகோர்த்தது. இவர்கள் உலகின் ஒரேயொரு coding அற்ற, சந்தர்ப்பம் சார் விழிப்புணர்வு கொண்ட, பன்மொழி Chatbot கட்டமைப்பு தளத்தின் படைப்பாளிகளுடன் கைகோர்த்துள்ளனர். இந்த Autochatic இன் தலைமைக் காரியாலயம் பாரிஸ் இலும் செயற்பாடுகள் ஐரோப்பா, சிங்கப்பூர், நியுசிலாந்து மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.

eChannelling Chatbot என்பது நம் நாட்டில் Facebook இன் மெசென்ஜர் தளத்தின் ஊடாக இயங்கும் நாட்டின் முதலாவது செயற்கை நுண்ணறிவிலான ச்சனல் செய்யும் bot ஆகும். இதன் மூலம் நோயாளருக்கு வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள முன்பதிவுகள் செய்துகொள்வதற்கும் பணப்பரிமாற்றங்களை செய்து கொள்வதற்கும் முடியும். Chatbot ஆனது eChannelling இன் நவீன டிஜிட்டல் முன்னெடுப்பாகும். இது வைத்தியர்களை சந்திப்பதற்கான நேரங்கள் மற்றும் அமர்வுகள் தொடர்பான தகவல்களை 24 மணிநேரமும் மனித முகவரைப் போன்றதோர் வர்ச்சுவல் முகவர் அனுபவத்துடன் தருகிறது. அத்தோடு வைத்தியரை சந்திப்பதற்கான அமர்வுகளை புதுப்பிக்கப்பட்ட நியம நேரத்தில் வழங்குகிறது.

ஒரு மருத்துவரை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள மற்றும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள Chatbot உதவி செய்கிறது. ஆயினும் மேலும் பல அம்சங்களுடன் விரிவுபடுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. eChannelling தொடர்பான தகவல்களில் மாற்றத்தை ஏற்படுத்த, நடந்துகொண்டிருக்கும் எண், செல்லத் தவறிய பதிவுகளுக்கான கட்டணத்தை திரும்பப் பெறும் கோரிக்கைகளை முன்னெடுத்தல் போன்றவை உள்ளடக்கப்படவுள்ளன. eChannelling வாடிக்கையாளர்களுக்கு மனிதத் தலையீடுகள் மிகவும் குறைவு, அதிக வாடிக்கையாளர் ஈடுபாடு, பாதுகாப்பான தகவல் பரிமாற்றம், இலகுவான அணுகல் மற்றும் நேரம் சேமிப்பு போன்ற அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் இல் Messenger ஊடாக அல்லது eChannelling Facebook பேஜ் இல் chat செய்ய தொடங்குவதன் மூலம் Chatbot இனை அணுகிட முடியும்.

250 க்கும் அதிகமான அங்கிகரிக்கப்பட்ட வைத்தியசாலைகள், 5500 க்கும் அதிகமான வைத்தியர்கள், 2000 க்கும் அதிகமான கிளைகள் மற்றும் எந்தவொரு மொபைல் வலையமைப்பினதும் விரிவாக்கம் என்பவற்றைக் கொண்ட eChannelling மூலம் எவ்வேளையிலும் எங்கிருந்தாலும் மிகவும் இலகுவாக வைத்தியரை சந்திப்பதற்கு நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும். eChannelling இலங்கையில் சுகாதாரத் துறையில் முதலாவது இலத்திரனியல் வணிகம் அடிப்படையிலான சேவையை வழங்கியோர் என்பதுடன் கொழும்பு பங்குச் சந்தையில் பொதுப் பங்கு வழங்கப்பட்ட முதலாவது தொழில்நுட்ப நிறுவனத்தினராகவும் விளங்குகின்றனர். eChannelling PLC ஆனது Mobitel (Pvt) Ltd இன் துணை நிறுவனம் ஆகும். அதே போல் தேசத்தின் சுகாதார துறையில் முன்னணி வகிக்கும் மென்பொருள் டிவலப்பர் மற்றும் ICT சேவை வழங்குனராகவும் திகழ்கின்றனர். தேசத்தின் மொபைல் சேவை வழங்குனரான மொபிடெல், eChannelling இனை தமது ஃபோர்ட்போலியோவுக்கு இணைத்துள்ளதன் மூலம் இலங்கையின் சுகாதார நலத்துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளதுடன் நாட்டின் தொடர்பாடல் துறையில் தமது நிலையை மேலும் வலுவாக நிலைநிறுத்தியுள்ளது.