Back to Top

30 மில்லி கிராம் ஹெரோயினை கையில் வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல்

30 மில்லி கிராம் ஹெரோயினை கையில் வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல்

June 18, 2019  06:31 pm

Bookmark and Share
திருகோணமலை, கோமரங்கடவெல பகுதியில் 30 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளை மற்றொருவருக்கு வழங்குவதற்கு கையில் வைத்திருந்த நபரை இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று (18) உத்தரவிட்டுள்ளார்.

கெமுனுபுர, கோமரங்கடவெல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 30 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளை வேறு ஒருவருக்கு வழங்குவதற்காக வீதியில் நின்ற போதே பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

(திருகோணமலை நிருபர் பாருக்)



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.

Most Viewed