Back to Top

தீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது

தீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது

June 26, 2019  06:18 pm

Bookmark and Share
தற்போது தீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது என இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகி சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது சர்வதேச தீவிரவாதம் எனவும் தற்போது நாங்கள் முகம் தெரியாத எதிரியுடன் யுத்தம் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முப்படை மற்றும் புலனாய்வு பிரிவின் உதவியுடன் இதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.​

அத்துடன் அவசரகால சட்டத்தை மேலும் ஒன்றரை மாதங்கள் அதிகரித்ததன் மூலம் தீவிரவாதத்தை ஒழிக்க தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.