Back to Top

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது

June 26, 2019  07:03 pm

Bookmark and Share
ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா, யக்கல பகுதியை சேர்ந்த 30 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர்கள் இன்று (26) அதிகாலை 1.30 மணியளவில் டுபாயில் இருந்து ப்ளய் டுபாய் விமான சேவைக்கு சொந்தமான FZ 557 என்ற விமானத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

குறித்த நபரின் பயணப் பொதியில் இருந்து 182 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 36,400 சிகரட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 22 இலட்சம் ரூபாய் என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Most Viewed