Back to Top

ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

June 27, 2019  02:46 pm

Bookmark and Share
சட்டத்துக்கு மாறான முறையில் தனது வருமானத்தை மீறி சொத்துக்களை உழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 30ம் திகதி மற்றும் செப்டம்பர் 10ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

கடந்த அரசாங்க காலத்தில் தனது வருமானத்தை மீறி முறையற்ற விதத்தில் 40 மில்லியனுக்கும் அதிக சொத்து சேர்த்ததாக கூறி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிராக இலஞ்சம் மற்று ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.